Wednesday, August 17, 2011

முதல் கவிதை (??)

நான் கல்லூரியில் படிக்கும் பொழுது எழுதியது. தினத்தந்தி குடும்ப மலரின் கடைசி பக்கத்தில் வெளியாகும் புதுக்கவிதைகளை பார்த்து நாமும் எழுதி அனுப்பலாமே என்று எழுதி அனுப்பிய கவிதை (??) 

சூரியன் - நிறம்
கருப்பு என்றால் உனக்கும் வெறுப்போ ??
இரவானதும் மறைகிறாயே !!
இதை என் நண்பர்களிடம் காட்டியபொழுது, 'மச்சி, கவிதையோட logic'ae தப்பு' என்றனர். அவர்கள் கூறியது உண்மை தான். சூரியன் மறைவதால் தான் இரவு வருகிறது, இரவு வருவதனால் சூரியன் மறைவதில்லை. ஆனால் இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது நமது கற்பனையை செலுத்தி நாம் கூற வரும் கருத்துக்கு வலுசேர்ப்பதே இதன் நோக்கம். இதனை இலக்கணத்தில் தற்குறிப்பேற்ற அணி என்று கூறுவர். இளங்கோவடிகள் கூட சிலப்பதிகாரத்தில் இதனை பயன்படுத்தி இருப்பார்

"
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
"
"மதுரை நோக்கி வரும் கோவலனை பார்த்து மதில் மேல் பறக்கும் கொடிகள், கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து உள்ளே வராதே என்று எச்சரித்தன" என்று காற்றில் தானாக ஆடும் கொடியின் மீது தனது கற்பனையை செலுத்தி அதன் முலம் தனது கருத்தினை கூறி இருப்பார் இளங்கோவடிகள்.

மற்றும் ஒரு எடுத்துக்காட்டு புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவில் இருந்து


"தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை

வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்

கூவினவே கோழிக் குலம்."

"நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலை ஆனதும், கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. தமயந்தியின் துயர் கண்டு தான், கோழிகள் சூரியனை விரைவாக வரக் கூறி கதறுவதாக" புகழேந்தி கூறி இருப்பார்.

இம்முறையினை தான் நானும் பின்பற்றியதாக நினைக்கிறேன். ஆனால் எனது நண்பர்களை போல தினத்தந்தியில் இருப்பவர்களும் நினைத்தார்கள் போலும் நான் அனுப்பிய இந்த கவிதைக்கு தினத்தந்தியினர் 'bulb' கொடுத்து விட்டார்கள் :-). கொஞ்சம் அதிகப்படியாகத்தான் கற்பனை செய்யது விட்டேனோ?? இருக்கலாம் :-). எனது கவிதையை தினத்தந்தியினர் வெளியிடவில்லை என்றால் என்ன?? இதோ நான் வெளியிட்டு விட்டேன் :-). நான் எழுதிய முதல் கவிதை இப்பொழுது வலை தளத்தில் :-)

இது வரை பொறுமையாக படித்ததற்கு பரிசாக நான் சமிபத்தில் ரசித்த ஒரு 'நல்ல' கவிதை :-)
"என்னவள்
ஒரு கவிதை எழுதினாள்,
கீழே கையெழுத்திட்டாள்.,
குழம்பினேன் ........
எது கவிதை என்று ....!!!!!"

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க !! :-)

4 comments:

  1. நல்ல கவிதை ஸ்ரீனி. logic தப்புன்னு சொல்லிட முடியாது. மாத்தியும் யோசிக்கலாமே. :-) சூரியன் மறையரதுனால இரவு வருகிறதென்று காலம் காலமாய் சொல்லி அதே பதிவாகிவிட்டது. உண்மையாக பார்த்தால் பூமி சூரியனிடமிருந்து திரும்புவதால்தானே இரவு வருகிறது?

    உங்க கற்பனையும் கவிதையும் அழகுதான். :-)

    சிலப்பதிகாரத்திலிருந்தும் நளவெண்பாவிலிருந்தும் வரிகள் பதிவு செய்தது நன்றாக இருக்கிறது. :-)

    ReplyDelete
  2. மிக்க நன்றி Grace. முதல் கவிதையை கவிதைன்னு ஒத்துகிட்டிங்க. அதுவே எனக்கு ரொம்ப சந்தோசம் :)

    ReplyDelete
  3. இந்திய தாயே! இந்திய தாயே! ஏன் இந்த அநீதி?

    this is missing... frustrated ;-)

    ReplyDelete
  4. ha ha.. :) paravallaiyae innum you are remembering that with varikal:).. enaku wordings properaa neyabagam ellai :(.. veeduku verappa college magazine parruthu post pannirae vediyathu dhan :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...