Wednesday, August 3, 2011

ராஜ ராஜ சோழனை நாம் மறந்துவிட்டோமா ??


ராஜ ராஜ சோழன்.. உலகத்தின் தலை சிறந்த மன்னர்களில் ஒருவர். கி.மு 980 முதல் 1014 வரை ஆட்சி புரிந்தவர்.  தனது ஆட்சியின் கிழ் மிகப்  பெரிய சோழ சாம்ராஜ்ஜியம் உருவாக்கியவர்.  தான் போரிட்ட எந்த போரிலும் தோல்வி அடையாத மகத்தான வீரர். ஆனால் இவ்வளவு சிறப்பு மிகுந்த வீரருக்கு நாமும் , நம் மாநில அரசும் தகுந்த மரியாதை தருகிறோமா??  அவர் நினைவாக அவர் பேரில் ஒரு பல்கலைகழகம் உண்டா? அவர் பேரில் ஒரு விருது உண்டா?  பாடப்புத்தகத்தில் அவர் சிறப்பைச்  சொல்லும் தனிப்  பாடம் உண்டா??  99% மக்கள் அறிந்தது எல்லாம் அவர் தஞ்சை பெரிய கோவில் கட்டினார் என்பது மட்டுமே !!.  அவருடைய சாதனைகள் அது மட்டும் தானா??. இதோ எனக்குத்  தெரிந்த சில துணுக்குகள்


 - குடவோலை முறை முலம் மக்களே தங்கள் தலைவர்களைத்  தேர்ந்தெடுக்கும் முறையை உருவாக்கி, ஜனநாயகத்திருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிள்ளையார் சுழி போட்டவர்.- நிலப்பகுதிகளை முறைப்படி ஆவணம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்.
- உலகத்திலேயே முதல் முறையாக கடற்படை அமைத்தவர்.
- தான் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில், கோவில் பணி புரிந்தவர்கள் பற்றியும் கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர்கள் பற்றியும் கூறி அனைவரையும் சிறப்பித்தவர்.
- கடல் கடந்த நாடுகளாகிய கம்போடியா, ஜகார்ட தீவுகள், தற்போதிய இந்தோனேசியாவின் சிலப்  பகுதிகள் ஆகியவற்றை தன் மகன் ராஜேந்திர சோழன் முலம் வென்று தமிழ் கொடியை உலகம் எங்கும் பறக்கும்படி செய்தவர்.

இன்னும் எனக்குத் தெரியாத சாதனைகள் பல உள்ளது. இது எல்லாம் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாமா??. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தில் பெரிய சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி தமிழின் பெருமையை உலகுகெங்கும் பரப்பிய மன்னற்கு நாம் தகுந்த மரியாதை செலுத்த வேண்டாமா ??.

கிருஷ்ணதேவராயர்க்கும், சத்ரபதி சிவாஜிக்கும் நம் அண்டை மாநிலமான மகாராஷ்டிரா, ஆந்திரா கொடுக்கும் மரியாதையை கூட நாம் ராஜ ராஜ சோழனுக்கு வழங்கவில்லையே ஏன்?. வேலை நிமித்தமாக நான் மும்பையில் 1.5 ஆண்டு இருந்த போது அங்கே மராத்தியர்கள் சிவாஜிக்கு கொடுக்கும் மரியாதை பார்த்து வியந்து போனேன். விமான நிலையம், புகைவண்டி நிலையம், பல்கலை கழகம், பேருந்து நிலையம் , பூங்கா, சாலை என அனைத்துக்கும் சிவாஜி பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். சிவாஜி பற்றியும் அவரது வீரம் பற்றியும் குழந்தை முதல் பெரியவர் அனைவருக்கும் தெரிந்து இருந்தது. சிவாஜி என்றால் மாபெரும் மராத்திய வீரன் என்று நமக்கும் தெரிந்து இருகிறது. ஆனால் அவர்களுக்கு ராஜ ராஜ சோழன் யார் என்று கூட தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் சிவாஜியை மராத்திய மக்களும், மாநில அரசும் இன்னும் மறக்கவில்லை. சிவாஜி இன்னும் மராத்திய மக்கள் மனதில் இருகிறார். அதே போல தான் கிருஷ்ணதேவரயரும் ஆந்திரா மக்களால் கொண்டாடப்படுகிறார். சிவாஜி, கிருஷ்ணதேவராயர் சிறந்த மன்னர்கள் என்றாலும் அவர்களது ராஜ்ஜியம் ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கிழ் இருந்த சோழ சாம்ராஜ்யதை விட மிக சிறியதே (பார்க்க படங்கள்)

மராத்திய சாம்ராஜ்ஜியம்


கிருஷ்ணதேவராயர் சாம்ராஜ்ஜியம்


ராஜ ராஜ சோழன்/ராஜேந்திர சோழன் சாம்ராஜ்ஜியம்ராஜ ராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் தங்கள் வாழ்நாளில் ஒரு போரில் கூட தோல்வியே தழுவாத மகத்தான வீரர்கள். ஏனைய நாடுகள் உலோகம் பற்றி அறியாத காலகட்டத்தில் உலோகம் வைத்து சிற்பங்களை வடிவமைக்க வைத்தனர். மேலும் அவர்கள் ஆட்சிக்காலத்தில் உலகத்தின் மிக பெரிய சாம்ராஜ்ஜியமாக விழங்கியது தமிழகம். ஆனால் இவர்களுக்கு தமிழகத்தில் என்ன மரியாதை செய்து இருகிறோம். எனக்குத் தெரிந்து ராஜ ராஜன் அவர்களுக்கு தஞ்சையில் சில சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ராஜ ராஜ சோழன் ஐப்பசி மாதம் சதைய நட்சத்திரத்தில் பிறந்தார் (ராஜ ராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாதத்தில் நானும் பிறந்தேன் என்பதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை :-) ) . ஐப்பசி மாதத்தில் சதைய நட்சத்திரம் தோன்றும் தினத்தை சதைய விழாவாக தஞ்சையில் கொண்டாடுவர். அவரது சிலையை கொண்டு பெரிய கோவில் சுற்றி ஒரு வலம் வருவர். அவ்வளவே முடிந்தது சதைய விழா. அவர் பிறந்த தினத்தை தமிழகமே கொண்டாட வேண்டாமா?? அரசு அதற்கு வழி வகை செய்ய வேண்டாமா??. ராஜேந்திர சோழனின் நிலைமை இன்னும் மோசம் அவருக்கு தமிழகத்தின் எந்த மூலையிலும் சிலை கிடையாது. எந்த கோவிலிலும் விழா எடுப்பதும் கிடையாது . இது எல்லாம் போதாது என்று தஞ்சை கோவில் முன் வாசல் வழியாக வந்தால் நல்லது இல்லை என்று அவதுறு பரப்பும் வேலைகளையும் செய்கிறோம்.

இன்னொரு ஆச்சரியமான செய்தி என்வென்றால், 18ஆம் நூற்றாண்டு வரை தஞ்சை கோவிலை கட்டியது யார் என்று நமக்குத் தெரியாது. ராஜ ராஜ சோழன் தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார் என்பதை கண்டறிந்து சொன்னது ஒரு ஜெர்மன் ஆய்வாளர். அதாவது 400 ஆண்டுகளில் (1400 - 1800) நம் வரலாற்றை முற்றிலுமாக மறந்துவிட்டோம். அந்தக் காலகட்டத்தில், நம் மீது தொடர்ந்து வந்த பல ஆக்கிரமிப்பு காரணமாக நமது முன்னோர்கள் மறந்து இருக்கலாம். நாமும் வளர்ந்து வரும் மேற்கத்திய மோகத்தில் அந்த தவறை மீண்டும் செய்து விடகூடாது. அப்படிச் செய்தால் காலம் நம்மை மன்னிக்காது.

நமது வரலாற்றைப் பற்றி நம் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவதும், ராஜா ராஜ சோழன் போன்ற அரசர்களின் வீரத்தைப் பற்றியும் அவர்கள் புரிந்த அளவிலா சாதனை பற்றி கூறுவதும் நம் அனைவரின் கடமையாகும்

ராஜ ராஜ சோழன் புகழ் என்றும் வாழ்க !!

12 comments:

 1. அருமையான பதிவு. என்னுடைய ஆதங்கமும் இதுவே. ராஜா ராஜ சோழனைப் பற்றி நினைக்கும்பொழுது பெருமையாகவும் ஒரு வித இனம்புரியா வேதனையும் மனதில் தோன்றுவது உண்மை. எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சரியாக இருக்க வேண்டுமே என்று தள்ளிபோட்டுக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவு நல்ல ஆரம்பம்.

  ReplyDelete
 2. Great start Srini... Keep Blogging... There is a strong innovative person in you... more than (or equla to coding)...you are deep thinker... write it ...share it.. after all..its you...and you...you will get that comfortable feeling...Happy blogging

  ReplyDelete
 3. மிக்க நன்றி Grace !!. ராஜா ராஜ சோழன் பற்றிய உங்கள் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்

  ReplyDelete
 4. Thanks Yasir for the encouragement... "strong innovative person/deep thinker" - u r saying comedy only na :-)

  ReplyDelete
 5. Thanks for reading and giving comments...but neeinga yaru'nu sonna innum nalla irrukkum :)

  ReplyDelete
 6. Its nice info about raja raja cholan. Thanks for sharing to all. Keep going on. We expect similar article like this one.

  ReplyDelete
 7. நன்றிகள் பல நண்பரே ....

  ReplyDelete
 8. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே :)

  ReplyDelete
 9. பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே :)

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...