ஆண்டு 1989, நான் SBOA வில் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த சமயம் அது... அப்போது நான் சுமாராக படிக்கும் மாணவன் தான். அதனால் நான் சரியாக படிக்காத சில பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து இருந்தார் எனது வகுப்பு ஆசிரியர். என்னுடன் வேறு சில மாணவர்களும் அவ்வகுப்பிற்கு வந்தனர். தினம்தோறும் பள்ளி முடிந்த உடன் இவ்வகுப்புகள் நடந்தன.
அன்று சிறப்பு வகுப்பில் பரிட்சை இருப்பதாக என் ஆசிரியர் முன்னமே கூறி இருந்தார். ஆனால் நானோ ஒன்றும் படிக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது என் மனதில் ஒரு "கருணாநிதி" முளைத்தான். உடனே நான் தேர்வு எழுத போகும் விடை புத்தகத்தை எடுத்தேன், அதன் கடைசி பக்கத்தில் எல்லா விடைகளையும் எழுதி தேர்வுக்கு தயார் ஆனேன் :-). பள்ளி முடிந்த உடன் சிறப்பு வகுப்புகள் தொடங்கின. நானும் எனது 'பிட்' உடன் தயாராக இருந்தேன். தேர்வு தொடங்கியது. எனது 'பிட்'னை ஆசிரியர் பார்க்கிறாரா என்று கவனத்துடன் "எழுதி" இல்லை இல்லை 'பிட்' அடித்து கொண்டு இருந்தேன். ஒரு 15 நிமிடங்கள் கடந்து இருக்கும். அப்போது திடிரென்று என் வலது பக்கத்தில் இருந்து ஒரு குரல், "மிஸ், சீனிவாஸ் புக் பார்த்து எழுதுறான் மிஸ்". திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன் ராஜேஸ்வரி என்று என்னுடன் படிக்கும் மாணவி, 'பாப் கட்டிங்' முடியுடன் சற்று உயரமாக இருப்பாள், என்னை மாட்டி கொடுத்துவிட்டாள் (இந்த பொண்ணுகளே இப்படி தான் பாஸ் :-)). அவளுக்கு என் மேல் என்ன கடுப்போ தெரியவில்லை. அவளுக்கு காட்டவில்லை என்ற கோபத்தில் போட்டு கொடுத்தாளோ?? தெரியவில்லை !!. என்ன கோபம் இருந்தாலும் "பேச்சு பேச்சாக" இல்லாமல் என்னை போட்டு கொடுத்துவிட்டாளே என்று அவள் மேல செம கடுப்பு. ஆனால் என்ன செய்ய கையும் களவுமாக மாட்டியாச்சு :-( . என்னோட விடை புத்தத்தை பிடுங்கி கொண்டு என்னை தனியே உட்கார வைத்தார் என் ஆசிரியர். பள்ளி முடிந்த உடன் என்னை அழைத்து செல்ல வரும் என் அப்பாவிடம் போட்டு கொடுக்க காத்து கொண்டு இருந்தார். என் அப்பாவும் வந்தார், அனைத்தும் அவரிடம் 'பற்ற' வைக்கப்பட்டது. அன்று வீடுக்கு சென்ற பின் அம்மா, அப்பா என்று இருவரிடமும் திட்டும், அறிவுரையும் மாறி மாறி வாங்கினேன். நான் செய்த முதல் திருட்டுத்தனம் "மெகா பிளாப்" ஆனது. அதன் பிறகு கல்லூரி முடிக்கும் வரை எனக்கு 'பிட்' அடிக்க தைரியம் வரவேயில்லை. இன்றளவும் என் அம்மா கேட்கும் கேள்வி "எப்படி டா உனக்கு அந்த வயசுல இந்த மாதிரி திருட்டு புத்தி வந்தது?" :-)
இப்போது திரும்பி பார்க்கும் போது இந்த தவறு அந்த வயதில் நடந்து அதற்கு
தண்டனையும் கிடைத்தது நல்லதே என்று தோன்றுகிறது. "தீயை தொட்டால் சுடும்" என்று எனக்கு புரிய வைத்த ராஜேஸ்வரி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு என் நன்றி :-)
"முளைச்சு மூணு இலை விடரதுக்குள்ள..." :-) ஆனால் இதை பதிவு செய்ய தனி தைரியம்தான் :-)If you make this post public, may be you can find out that 'cop' Rajeshwari!!
ReplyDeleteha ha :)..post is public only i think.. i don't think she would remember this incident..yaena thief will remember the cops..but cops will not remember thieves as they would have got lots of thieves:)
ReplyDeleteஉன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!! என்றும் வேண்டாம் முயற்சியில் அயற்சி :-)
ReplyDeleteNandri machi :)
ReplyDelete