Monday, August 15, 2011

இந்திய பயணம்


இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளன நான் இந்தியாவில் கால் பதிக்க :). 16 மாதங்களுக்குப் பிறகு இந்தியா செல்லவிருக்கிறேன். இத்தனை நாட்கள் எனது குடும்பத்தை, எனது ஊரை பிரிந்து இருந்தது கிடையாது. இத்தனை நாட்களும் "வேலை வேலை" என்றே பறந்து விட்டது. சற்று திரும்பி பார்க்கையில் இந்த அமெரிக்க பயணம் (சென்ற முறைக்கு நேர் மாறாக) மிகுந்த சவாலான பயணமாகவே அமைந்தது. நான் ஏப்ரல் 2010 அமெரிக்காவிற்கு வந்தேன். எனது 'Project' மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த நேரம். தினமும் 16 -17 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம். இந்தியாவில் இருக்கும் போதும் நான் அப்படி உழைத்து கொண்டு இருந்தாலும், அலுவலகத்தில் என்னுடைய சகப்பணியாளர்களுடன் ஒன்றாக உழைத்தப்படியால் அழுத்தம் கம்மியாக இருந்தது. ஆனால் அமெரிக்காவிலோ ஓநாயிடம் அகப்பட்ட ஆட்டை போல நான் எனது 'Client ' இடம் தனியாக அகப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். என் ட்டுப்பாட்டுக்கு அப்பாற்ப்பட்ட பல்வேறு காரங்களுக்காக பல 'deadline'கள் காற்றில் பறந்தன. இதனால் உண்டான 'Client Pressure', என்னுடன் வேலை பார்க்கும் (நான் எது செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்கும்) 'U.S .TechLead' Sue என்ற பெண்மணியிடம் எப்பொழுதும் சண்டை, 16 -17 மணி நேர வேலை, தனிமை என அனைத்தும் சேர்ந்து ஏப்ரல் 2010 முதல் மார்ச் 2011 வரையிலுமான காலகட்டத்தை என் வாழ்வின் மிகுந்த கஷ்டமான/ சவாலான காலமாக மாற்றியது. அழுத்தம் காரணமாக எனது மடிக்கணினியை (Laptop) தூக்கி எறிந்த நேரமும் உண்டு. திரும்பி இந்தியாவிற்கு சென்று விடலாம் என்று பல முறை தோன்றியதும் உண்டு. ஆனால் அப்படி சென்றால் எனக்கு "டாலர்" சம்பளம் கிடைக்காது. அதன் காரணமாக நான் கோவையில் கட்டி கொண்டு இருக்கும் வீடு பாதியில் நின்று விடும் என்பதற்காக பல்லை கடித்து கொண்டு இருக்க வேண்டியதாய் போயிற்று . ஆகஸ்ட் 2010இல் என் அக்காவிற்கு குழந்தை பிறந்ததும், அக்டோபர் 2010 எனது அமெரிக்க நண்பர் Paul Snyder வீட்டிற்கு சென்று 3 நாட்கள் தங்கியதும் 2010இல் மறக்க முடியாத நிகழ்வுகள். இந்த இரண்டு விஷயங்கள் தவிர 2010 முற்றிலும் மறக்க கூடிய வருடமே. ஏப்ரல் 2011இல் எங்களது Project Deliver செய்த பின் வாழ்க்கை ஒரு அளவு கட்டுப்பாட்டில் வந்தது. வேலை அழுத்தம் கொஞ்சம் கம்மியானது. வேலையை தவிர வேறு சிலவற்றிலும் கவனம் செலுத்த நேரம் கிடைத்தது . பொன்னியின் செல்வன் படித்தும், நண்பர்கள் Albert/Grace அவர்களுடன் Atlanta'வை சுற்றியுள்ள சில இடங்கள் சென்றும், மாலைகளில் நண்பர்களுடன் கிரிக்கெட்/டென்னிஸ் விளையாடியும் மே 2011 முதல் தற்போது வரையிலான காலகட்டம் கொஞ்சம் அழுத்தமின்றி சென்றது.

இப்பொழுது இந்தியாவிற்கு புறப்பட தயாராகி விட்டேன். அக்காவிற்கு மடிக்கணினி (Laptop), அப்பாவிற்கும், மாமாவிற்கும் கடிகாரங்கள், சட்டைகள், அக்காவின் குழந்தை Lekhasreeக்கு நிறைய பொம்மைகள் மற்றும் துணிகள், நண்பர்களுக்கு கைபேசி (Cellphone) மற்றும் வேறு சில 'Electronic items' என அனைவருக்கும் என்னால் முடிந்தவற்றை எடுத்து செல்கிறேன். இந்தியாவில் ஒரு மாத காலம் இருப்பேன். 16 மாதங்களுக்கு பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திப்பது, Lekhasree இன் முதல் பிறந்த நாள், வீட்டின் புதுமனை புகுவிழா, விநாயகர் சதுர்த்தி, நெருங்கிய நண்பரின் கல்யாணம், என பல உற்சாகமான விஷயங்கள் காத்து கொண்டு இருக்கிறது. எப்படா ஆகஸ்ட் 28 காலை 7 மணி (நான் கோவை விமான நிலையத்தில் தரை இறங்கும் நேரம்) வரும் என்று காத்து கொண்டு இருக்கிறேன் :-)...
"கோவையே!! கோவை வீரன் கோவைக்கு வருகிறான்" .. ஹி ஹி :-)

6 comments:

  1. கடந்த ஒரு வருட வாழ்க்கையை அழகா, அழுத்தமா, சுருக்கமா சொல்லிருக்கீங்க ஸ்ரீனி. உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள். :-)
    'மடிக்கணினி' என்ற சொல்லும் தெரிந்து கொண்டேன், நன்றி. :-)

    ReplyDelete
  2. நீங்க தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி Grace!!

    ReplyDelete
  3. என்ன மச்சி சிரிக்கிற ??

    ReplyDelete
  4. really i see ur struggle my boy god will give you all good things in life the passage affected me soo much my brother. we are there for you we will not allow you to struggle, kalayana venkataramana perumal will be there with you. dont worry thambi

    ReplyDelete
  5. finally nee padichudiyaa.. appadi:).. eppa ellam jolly dhan poguthu :)..btw why posting as anonymous.. post under ur name mrs.lakshmi.. appuram athu yenna "kalayana venkataramana perumal" yethou ul kuthu irrukaa??

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...