கல் நெஞ்சம் கொண்டவர்களிடம்
கல் உடைக்கிறேன்,
கடனாளி பெற்றோரிகளின்
கடன் தீர்க்கும் பொருளாகிறேன்,
படிப்பின் மூலம் ஒளி தருவதை விடுத்து
பட்டாசின் மூலம் ஒளி தருகிறேன்,
ஓடியாடி விளையாடாமல் பணத்தாசை ம(மா)க்களுக்காக
ஓடியாடி உழைக்கிறேன்,
சிறப்பான கல்வியினை நோக்கி ஓட ஆசை கொண்டும்
சில்லறை தேடி ஓட வற்புறுத்தப்படுகிறேன்,
ஈரமற்ற முதலாளியின் பாத்திரங்களை கண்களின்
ஈரம் கொண்டு கழுவுகிறேன்,
ஆயிரமாயிரம் கண்கள் என்னை கடந்த போதும்
ஆண்டவன் மட்டுமே துணையாக வருகிறான்,
பரிதவிக்கும் கண்கள் கூட இரக்கப் பார்வை மட்டுமே
பரிசாகத் தருகின்றன,
இரக்கமற்ற சமுதாயமே.. மனம் இறங்கி கேட்கிறேன்
இறுக்கம் தளர்த்தி உதவ மாட்டாயா?
கருவறையிலிருந்து வெளிப்பட்ட முதல் உழைக்கிறேன்
கண் கொண்டு பார்க்க மாட்டாயா?
என் கதறலை உன் செவி கேட்க மறுக்கிறதா ?
என் நிலை மேன்பட ஏதேனும் செய்ய மாட்டாயா?
இந்த கவிதைக்கு அட்லாண்டா மாநகர தமிழ் சங்கத்தின் கவிதை போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்தது
//கருவறையிலிருந்து வெளிப்பட்ட முதல் உழைக்கிறேன்
ReplyDeleteகண் கொண்டு பார்க்க மாட்டாயா?//
மனம் வலிக்கும் வரிகள்...
நல்ல நோக்கத்திற்கான கவிதை ஸ்ரீனி..நன்று!
நன்றி கிரேஸ் :)
Deleteபிஞ்சுக் குழந்தைகளின் துயர்தனை
ReplyDeleteஎம் நெஞ்சு வலிக்கும் அளவிற்கு
கவிதை வ(லி)ரிகளால் நிறைத்து உள்ளீர்கள் .
அருமை !மேலும் இனியன தொடர வாழ்த்துக்கள் சகோ .
நன்றி சகோதரி :). தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.:)
Delete