Thursday, December 22, 2011

சிறைச்சாலை


சுற்றமும் நட்பும் வாழ்த்த,
அன்னையும் தந்தையும் ஆசிர்வதிக்க,
சிறைச்சாலைக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டான்
இன்று அவனுக்கு திருமணம் !!

Monday, November 21, 2011

பொன்னியின் செல்வன் - எனது பார்வை


ஒரு வழியாக பொன்னியின் செல்வன் படித்து முடித்துவிட்டேன். நான் கதை புத்தகம் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லாதவன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த மன்னராகிய ராஜா ராஜ சோழனின் கதை என்பதால் இதை படித்தாக வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. உடனே பொன்னியின் செல்வன் புத்தகத்தை வலைதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன். இரண்டு அத்தியாயத்திற்கு மேல் என்னால் கணினியில் படிக்க முடியவில்லை. புத்தகம் வாங்கி படிப்பது தான் ஒரே வழி என்று முதன் முதலாக நான் வாங்கிய கதை புத்தகம் பொன்னியின் செல்வன். படிக்க தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இதோ இப்பொழுது படித்து முடித்து விட்டேன். (அம்மாடி!! எவ்வளவு வேகம் :-) ).

நான் படித்த பொன்னியின் செல்வன் குறித்த எனது பார்வையே இந்த பதிவு. கல்கி போன்ற ஒரு மகத்தான எழுத்தாளரின் படைப்பை விமர்சனம் செய்யும் முயற்சி அல்ல இந்த பதிவு. அதற்கான தகுதியும் எனக்கில்லை. பொன்னியின் செல்வனில் நான் ரசித்த விஷயங்கள், எனக்கு எழுந்த சந்தேகங்கள், ஏற்பட்ட சிறு  
வருத்தங்கள் ஆகியவற்றை பதிவு செய்யும் முயற்சியே இந்த பதிவு.

மிகவும் ரசித்த விஷயங்கள் !!

1. கதை படிக்கும் ஆர்வம் இல்லாத என்னை போன்ற ஒருவனை ஐந்து பாகம் கொண்ட இந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்க வைத்து இருக்கின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் கல்கியின் கதை சொல்லும் பாங்கு. பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், படிப்பவர்களை குழப்பாமல் கதையின் ஓட்டத்தை சீராகவும், மனதில் ஆழமாக பதிய வைக்கும் படியும் கதையை அமைத்து இருந்தார். இதன் காரணமாகவே நான் இந்த புத்தகத்தை 1.5 ஆண்டுகளாக விட்டு விட்டு படித்தாலும் என்னால் எந்தவித தடையுமின்றி கதையை பின்பற்ற முடிந்தது.

2. பொன்னியின் செல்வர் சுழலில் சிக்கி நாகப்பட்டினம் புத்த விகாரத்திற்கு செல்லும் வரையிலான படலம் எனக்கு மிகவும் பிடித்த படலம் ஆகும். சுழல், கப்பல் மற்றும் வந்திய தேவன், பொன்னியின் செல்வர், பூங்குழலி இடையே நடக்கும் உரையாடல்கள் என கல்கி விவரித்து இருக்கும் ஒவ்வொன்றும் என்னையும் அவர்களுடன் பயணம் செய்ய வைத்து விட்டது. இது
போன்று நெஞ்சை அள்ளும் படலங்கள் பல உள்ளன.

3. கதை நெடுகிலும் ராஜபாட்டை குறித்து, ஏரி குறித்து, மக்கள் வாழும் முறை குறித்து கல்கி கூறியது அக்கால மக்கள் எப்படி வாழ்ந்து இருக்க கூடும் என்பதை காட்டியது.

4. பலர் இந்த கதையின் கதாநாயகனாக வந்தியதேவனை கருதினாலும் எனக்கு
பிடித்த கதாபாத்திரம் திருமலை என்கின்ற ஆழ்வார்க்கடியான். அவனை ஒரு நகைச்சுவையாளன் போல் சித்தரித்தாலும், அவனது கதாபாத்திரத்தின் மூலம் பல விஷயங்களை அற்புதமாக, நாம் ஆச்சரியப்படும் வகையில் கூறி இருப்பார் கல்கி.

5. பூங்குழலியின் கதாபாத்திரம் அமைத்த விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. சோழ ராஜ்ஜியத்தில் ஒரு ஓடக்கார பெண் கூட பட்டத்துராணி ஆகலாம் என்பதை காட்டியது. பூங்குழலியின் துணிவும், தன்னம்பிக்கையும், தைரியமும் என்னை மிகவும் கவர்ந்தது. நம் பண்டைய பாமர பெண்டிரின் குணத்தினை பூங்குழலியின் மூலம் அழகாய் கூறி இருப்பார் கல்கி.

ரசித்த விஷயங்கள் என இன்னும்
கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அதற்கு இந்த வலைத்தளம் போதாது.

எழுந்த சந்தேகங்கள் !!

1. கதையில் வரும் பல முக்கியமான விஷயங்கள்
தற்செயலாக நடப்பதாக காட்டி இருப்பது கதையின் சுவாரசியத்தை தடை செய்வதாக இருந்தது. உதாரணமாக பொன்னியின் செல்வரின் மதம் பிடித்த யானை சரியாக எப்படி பூங்குழலி, வானதி இருக்கும் இடம் தேடி வந்தது??. ரவிதாசனும் அவனது கூட்டாளிகளும் சதியாலோசனை நடத்தும் அதே இடத்தில் எப்படி சுழலில் சிக்கிய பழுவேட்டரையர் கரை சேர்ந்தார்??. பறந்து விரிந்த இலங்கையில் சரியாக பொன்னியின் செல்வர் இருக்கும் இடத்திற்கு எப்படி வந்தியதேவனும், ஆழ்வார்க்கடியானும் சென்றனர் ??. இது போல பல நிகழ்வுகள் உண்டு.

2. வந்தியதேவன் மீது குந்தவையும், பொன்னியின் செல்வரும் வைத்து இருக்கும் நம்பிக்கை எனக்கு ஆச்சரியமாக தோன்றியது. முதலில் வந்தியதேவன் கந்தமாறனின் தங்கை மணிமேகலை குறித்து மயங்குவதும், பின்பு பூங்குழலியால் ஈர்க்கப்படுவதும், இறுதியாக குந்தவை மீது காதல் கொள்வதும் என ஒரு நிலை இல்லாத மனம் உடையவனாக இருந்தான். அது மட்டுமின்றி நந்தினியை நேரில் பார்க்கும் பொழுது 'தேவி' என்றும், அவள் இல்லாத பொழுது 'கொடிய நாகம்', 'விஷப்பாம்பு' என்றும் குறிப்பிடுவதும் வந்தியதேவன் மீதான நம்பிக்கையை குறைத்தது. மேலும் அவனது அவசரப்புத்தியினால் தனக்கும், பொன்னியின் செல்வருக்கும் பல இன்னல்களை தேடி தந்தான். இப்படி ஒரு தெளிவு இல்லாத ஒருவனிடம் எப்படி அறிவுமிக்க குந்தவையும், பொன்னியின் செல்வரும் அளவில்லா நம்பிக்கை வைத்து இருந்தனர்??.

3. மகாவீரனாக சித்தரிக்கப்பட்ட கரிகாலன் தன்னை கொலை செய்ய
த்தான் நந்தினி வந்து இருக்கிறாள் என தெரிந்தும், அவளிடம் தொடர்ந்து பேசி கொண்டு இருந்து இறுதியில் கொல்லப்படுவது வியப்பாக இருந்தது. இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பான் அந்த மாவீரன்?.

4. பொன்னியின் செல்வர் இலங்கை தெருக்களில் நடமாடும் பொழுது சில முறை ஊமை கிழவியால் காப்பாற்றப்படுவார். இலங்கையே வென்ற மாவீரர், சோழ ராஜ்ஜியத்தின் இளவரசர் எப்படி தெருக்களில் எந்தவித பாதுகாப்புமின்றி செல்வார்?.

5. கரிகாலனை கொன்றது யார் என்பது இறுதி வரை
குழப்பமாகவே இருந்தது. பழுவேட்டரையர் தான் கொன்றதாக கூறி தன்னை மாய்த்து கொண்டாலும் இறக்கும் தருவாயில் தான் கொல்லவில்லை என்று கூறி இறக்கிறார். அப்படி என்றால் கரிகாலனை கொன்றது யார்??. கொலை நடந்த இடத்தில் இருந்த நந்தினி, வந்தியதேவன் ஆகியோரில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ரவிதாசனாக இருக்க கூடுமோ??. இந்த கேள்விக்கான பதிலை கல்கி வாசகர்களிடம் விட்டு விட்டாரோ??.

6. வரலாற்று கூற்றின்படி, சுந்தர சோழர்க்கு பிறகு மதுராந்தக சோழர்
சோழ ராஜ்ஜியத்தின் ஆட்சி பொறுப்பு ஏற்றார் என்பதில் ஐயமில்லை. ஆனால் மதுராந்தக சோழரை, அரண்மனை வாசமே தெரியாத, எந்த போர் பயிற்சியும் பெறாதவன் போல சேந்தன் அமுதன் மூலம் சித்தரித்திருப்பது திகைப்பாக இருந்தது. மதுராந்தக சோழர் எந்த போர் பயிற்சியும் பெறாத மன்னர் என்பது வரலாற்று உண்மையா இல்லை கல்கியின் கற்பனையா??. கல்கியின் கற்பனையாக இருக்கும் பட்சத்தில் இந்த நிகழ்வு சற்று அதிதமாக எனக்கு தோன்றுகிறது.

(இந்த சந்தேகங்கள் கல்கியின் கற்பனை திறனை குறித்தோ அல்லது அவரது எழுத்தை குறித்தோ அல்ல. கதையில் முழுவதுமாக என்னை செலுத்தியதனால் ஏறப்பட்ட சிறு நெருடல்கள். இந்த நெருடல்களுக்கு உங்களிடம் பதில் இருந்தால் தயவு செய்து பதிவு செய்யவும். ஆனால் ஒன்று
கூறியே ஆக வேண்டும், என்னையும் கூட கதைக்குள் முழுவதுமாக செலுத்த வைத்தது என்றால் அது கல்கியின் அபார மொழி நடை மற்றும் எழுத்தாற்றலை காட்டுகிறது).

ஏற்ப்பட்ட சிறு வருத்தங்கள் !!

1. முன்னரே கூறியது போல இந்த கதை படிக்க ஒரு பெரிய தூண்டுகோள் இது ராஜா ராஜ சோழன் காலகட்டத்தில் நடந்த கதை என்பது. ஆனால் ராஜா ராஜ சோழனின் சாதனைகள் குறித்தோ அவர் ஆட்சி குறித்தோ சொல்லப்படாதது மிகுந்த வருத்தத்தை தந்தது !!.

2. சோழ ராஜ்ஜியத்தின் மகாசக்கரவர்த்தி சுந்தர சோழர் தனது இறுதி காலத்தில் சிற்றரசர்களின் கைபொம்மையாக இருந்தார் என்பது வருத்தத்தை தந்தது.

சுருக்கமாக பொன்னியின் செல்வன் குறித்து கூற வேண்டுமென்றால் "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" :-) என்ற கூற்றை தான் கூற வேண்டும். "பொன்னியின் செல்வன் - தமிழ் தாயின் செல்வன்" - தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம், அல்ல அல்ல, பொக்கிஷம் இது. பொன்னியின் செல்வன் கொடுத்த உற்சாகத்தில் பால குமாரன் எழுதிய, பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியான , "உடையார்" படிக்க 
 ஆயத்தமாகிவிட்டேன். பொன்னியின் செல்வன் போல் இதுவும் சுவாரசியமாகவும், தகவல் பூர்வமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

Sunday, November 13, 2011

கடமை உணர்ச்சி


கடமை உணர்ச்சி -
சிதைந்து உடைந்த பின்னும் உருவம்
காட்டும் நிலைக்கண்ணாடி !!

Tuesday, October 25, 2011

தீபாவளி - நேற்று, இன்று, நாளை??


புத்தாடைகள் அணிந்து,
நண்பர்களிடம் நேரில் இனிப்பையும், வாழ்த்தையும் பகிர்ந்து,
கூட்டாக பட்டாசினை வெடித்து,
தீபாவளி கொண்டாடினோம் நேற்று

புத்தாடைகள் அணிந்து,
நண்பர்களிடம் Facebook 'இல், SMS இல், 'இனிப்பான' வாழ்த்தை பகிர்ந்து,
திரைநட்சத்திரங்கள் தொலைக்காட்சியில் பட்டாசு வெடிப்பதை பார்த்து
தீபாவளி கொண்டாடுகிறோம் இன்று

நாளை எப்படியோ ??

அமெரிக்க தீபாவளி !!


விரைந்து எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து
உரசினேன் எனது தீபாவளி பட்டாசான ...தீக்குச்சியை !!
அமெரிக்காவில் வெடி வெடிக்க அனுமதி வாங்க வேண்டுமாம் :o( !!

Friday, October 14, 2011

Trip to Banner Elk, NC

The Gang (Adults- Sibi, Suni, Grace, Albert & Me. Kids - Sanya, Hani & Alvin) - Who made the trip - in front of Cabin House, where we stayed.
It all started when my friend Albert asked if I want to join him, his wife Grace and their 2 lovely sons (Hani, Alvin) for a Trip to Banner Elk, NC to stay in cabin for 3 days and roam around the places nearby the cabin. I said 'yes' immediately as both of them have been my long time friends and invite me where ever they go :). We had been on many many trips together in US (most memorable being Orlando, Florida in 2007) and it has been always fun. So there was no second thoughts when question was put forth to me. We started on Oct 7 Friday morning 7AM from Atlanta. Albert's friend Sibi's family (his wife Suni and their lovely daughter Sanya) also joined us. It was 6 hrs drive from Atlanta to the Cabin located in Banner Elk, North Carolina. Cabin House was amidst a jungle and as it was fall time in US, the trees were beginning to show their 'true' colors. Wow Wonderful sight it was !!

One such view from behind the Cabin House --

Seeing that I got a (mokkai !?) thought. But anyways if I don't record it who will record it :-)

"When trees change color, world becomes beautiful
When people change color, world becomes miserable"

eppadi ok'va?? .. :-)

Colors on Trees and Hills were compensating the lack of colors on the road :-). It was a very beautiful scenic drive through hills to reach the cabin house. However as we were reaching the Cabin , we had to withstand 1.5 miles of dusty road (yes you read it right, DUSTY road in U.S for 1.5 miles !!!!). We reached around the Cabin 5PM EST. On reaching the house, all were tired (not sure why I was tired as I was just sitting and sleeping in the car, probably seeing others get tired I got it too :-)) so we decided to restrict ourselves to the cabin. And that laid the platform for a fun night with kids Alvin, Hani & Sanya. It started with cycling with Alvin, racing up and down the slope in his 'McQueen' cycle. Then as it got darker, the scene shifted to indoors, playing word games with Hani, Sanya where a person needs to guess a word based on the clues given by other person. Later it became a game between adults. Albert, Grace, Sibi, Suni were answering the question that I was asking :-). As the game ended, curtains came down on day 1 of the trip

Me playing games with Sanya, Alvin, Hani. Albert trying to master a 'Monopoly' game :-)
Day -2, the plan was to go to Mystery Hill & Grand Father Mountain (Biggest attraction of NC). Day-2 started for me with Alvin explaining in his malalai 'Tamil' his plans on what he is going to do that day. And how is going to travel to India (?!) with his friends (and his friends list included me too !!) and come back to Atlanta that day itself (Kids can do anything isn't it ??) . We were talking for about 20 mins. His malalai Tamil is something you can keep on hearing. 5000 yrs ago Tamil Scholar Thollkappiar had instituted the grammar for Tamil but without knowing to read, write Tamil Alvin has instituted a different grammar for Tamil through his malalai 'Tamil' which is sweeter than original Tamil. Good Job Alvin :-). And we had to end our conservation as we have to move onto Mystery Hill.

Onto Mystery Hill - Mystery Hill was just a house which was built in a way that gravity acts on us at 45 degrees. Again it was fun playing with Sanya & Hani inside the mystery hill. And I have to say I admire the marketing strategy of the Americans what seemingly simple things are being wrapped in attractive manner and presented in a way we enjoy it. Mystery Hill is also one such place where thought & marketing matters !!

Me & Sibi at Mystery Hill... (Sanya & Hani crawling not able to withstand Gravity :-))


Next stop was Grandfather Mountain. As we drove down, we couldn't take our eyes of the road. What beautiful houses, What beautiful locations OMG !!!. We had our cameras clicking and handycams running continuously till we reached Grand Father Mountain.

One such breath taking house ---- I wish I had one such house (Kanna!!, aasai irrukkalam paeraasai irrukka kudathu .. :-))

The highlight of Grandfather Mountain was the swinging bridge. Wow !! what a view it was from the bridge, which was 1 mile from sea level. I have never seen such a beautiful sight. Unfortunately, since we had our camera's & handycam's running continuously, by the time we reached the top, batteries ran out on all of them and we had to content with pictures from our cell phones. With that ended 'outside' trip time for day 2 and we headed back to Cabin for 'indoor' trip time which was the most enjoyable part :).

Grand Father Mountain View - Nature's Magic with Colors.. Nature is a Great Artist isn't it??
Again it was back to Hani, Sanya & Alvin. This night it was Question night, where I had to ask questions to Hani & Sanya. They were in 2nd grade and so I have stoop down to their level and ask questions. Believe it or not it was difficult to ask simple questions. But I think i managed it well, because both were excited in answering my questions (which they did very well answering almost 95% of questions that I asked) and were eager for more questions. I also got a compliment from Sanya saying I can be 'School teacher' :-), so I have a job if the software industry dumps me :). I also got a nick name from Sanya - 'Milk', probably she knows that I was as white as Milk in my heart and gave me that nick name and you know kids don't lie :-). With such good compliments ended Day -2 :-)

On Day-3, the plan was to go to blowing Rock and then head back to Atlanta. I still don't understand why they called it blowing rock probably another marketing technique by Americans, there was nothing 'blowing' in the rock :-). Again, the scenic view that we could see was Mind blowing.

View from Blowing rock - What a view !!... There is no limits to beauty of mother Nature
With that ended the trip and we headed back to Atlanta after having lunch in a 'HongKong Restaurant' where Frog legs was also part of the menu. Yuck !!!. Is there anything these Chinese guys don't eat....???

On the overall, I enjoyed the indoor part of the trip more than outdoor trip. Playing with kids was the only thing I had to do which I always love :-). I did try to get more task allocated to me. Knowing about my driving skills (though I have a DL), I didn't dare to ask Albert if I can help him in driving. But I did ask Grace if I can help her in kitchen, but she 'smartly' declined probably she knew about my cooking skill. But wait.. how come ?? she hasn't tasted (or suffered) my cooking yet. But somehow she judged it correctly and didn't want to take a chance. Fair Enough :-). So I was just doing primary task "Playing with kids" and the great thing was kids was also enjoying. Alvin and Hani, I have been playing with them for years so no surprises with them, but Sanya was a new kid whom I met in this trip and she was enjoying my company too, asking me for a question every time, even gave a nick name to me. At the end, it felt very good when her mother Suni said to me that "Sanya doesn't get attached to 'new guys' easily but she got attached to you" :-) (Ennamo irrukku machi unkitta :-)). It is always a pleasure to see and make kids smile :-).

To sum it up, it was yet another memorable & enjoyable trip with Albert, Grace & Co. Thanks to Albert & Grace for arranging and having me :-). And special thanks to kuttis Alvin, Hani & Sanya for keeping me entertained and occupied. Thanks to Sibi & Suni too for being accommodative, Hope we go on another such trip sooner :-)

Saturday, October 1, 2011

தமிழகத்தின் தந்தை காமராஜர்


காமராஜர் அவர்கள் பற்றி பல கட்டுரைகள், பதிப்புகள், ஒலிநாடாக்கள் இருக்கின்றன. அவர் பற்றி நான் என்ன புதிதாக கூற போகிறேன் என்று நினைக்கலாம். உண்மை!! நான் ஏதும் புதிதாக சொல்ல போவதில்லை. காமராஜர் வாழ்க்கை பற்றி அறிந்தவர்களுக்கு இந்த பதிவு அரைத்த மாவை அரைத்தது போல இருக்கும். இருப்பினும் அவரை எழுதாமல் எனது தளம் முழுமை அடையாது. எனவே இந்த பதிவு.

காமராஜர் இறந்து 6 வருடங்கள் கழித்தே நான் பிறந்தேன். காமராஜர் பற்றி நான் கேட்டது எல்லாம் என் அம்மாவிடம் இருந்து மட்டுமே. நமது பாட திட்டத்தில் காமராஜர் குறித்த தனி பாடம் இருந்த மாதிரி எனக்கு ஞாபகமில்லை. சில மாதம் முன்பு வரை காமராஜர் என்றால் கர்மவீரர், கிங்மேக்கர், படிக்காத மேதை, பெருந்தலைவர் என்று மட்டுமே தெரியும். ஆனால் எதனால் இந்த பட்டப்பெயர்கள் வந்தன என்பது தெரியாமல் 'ஆட்டு மந்தை' போல எல்லாரும் சொல்கிறார்களே நாமும் சொல்லுவோம் என்று இருந்தேன். சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு இருந்த ஆர்வம் கூட நமக்காக உழைத்த தலைவர் பற்றி தெரிந்து கொள்வதில் இல்லையே என்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. சில மாதம் முன்பு, வலைத்தளத்தில் நான் உலாவி கொண்டு இருந்த பொழுது, காமராஜர் வாழ்க்கை வரலாற்றினை படிக்க நேர்ந்தது. இப்படியும் ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்தாரா என்ற வியப்பை தந்தது.

காமராஜர், குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு மகனாக ஜூலை 15 ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு பிறந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பிற்படுத்தப்பட்ட குலத்தில் பிறந்தாலும், அவரது அயராத மக்கள் பணி அவரை தமிழகத்தின் தலை சிறந்த முதல்வராக ஆக்கியது. பின்னாளில் அவருக்கு இந்தியாவின் தலை சிறந்த விருதான பாரத ரத்னா விருதையும் வாங்கி தந்தது.

1954 முதல் 1963 வரை அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவரது சிறப்பை பற்றி என்ற எழுத வேண்டும் என்றால் எழுதி கொண்டே இருக்கலாம். அதற்கு இந்த தளம் போதாது. எனவே காமராஜர் பற்றி நான் அறிந்தவற்றில் சிறு துளிகள் மட்டும்
1. "வீடுதோறும் கலையின் விளக்கம்,வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடுமுற்றிலும் உள்ளன ஊர்கள்,நகர்கள் எங்கும் பலபல பள்ளி"

என்ற பாரதியின் பாடலுக்கு ஏற்ப ஊராட்சி தோறும் பள்ளிகள் அமைத்தார். ஏழை குழந்தைகள் பசியின்றி படிக்க மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் முலம் கல்வி புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தினார்.

2. விவசாயம், மின்சாரம், தொழில் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தமிழகம் அசுர வளர்ச்சி பெரும்படி செய்தார். அவரது ஆட்சி காலத்தில் எண்ணற்ற மின் நிலையங்களும், அணை தேகங்களும், தொழில் கூடுங்களும் கட்டப்பட்டன.

3. தன் தாயை விட தாய்நாட்டை நேசித்தவர் காமராஜர். இறுதி காலம் வரை சிவகாமி அம்மையார் ஒரு எளிய விட்டில் தான் வாழ்ந்து வந்தார். தனக்கு பதவி வந்தது என்பதற்காக தனது நிலையையோ, தனது உறவினர்களின் நிலையையோ அவர் மாற்றவில்லை. தன் தாய்க்கு மாதம் அவர் அனுப்பிய பணம் வெறும் ரூபாய் 120/- மட்டுமே.

4. பதவியை பெரிதாக நினைக்காமல் வயதானவர்கள் உயர் பதவியில் இருக்ககூடாது என்ற திட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன்னுதாரணமாக தனது முதல்வர் பதவியை 1963 ஆம் ஆண்டு ராஜனாமா செய்தார். அவர் நல்ல நோக்கத்துடன் செய்து இருந்தாலும் அவர் செய்த ஒரே தவறான காரியம் (என்னை பொறுத்தவரையில்) இதுவாக தான் இருக்க முடியும். மேலும் நேரு காலமான பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜருக்கு பிரதமராகும் வாய்ப்பு அமைந்த போதும் அதை ஏற்க்காமல் லால் பகதூர் சாஸ்திரி அவர்களையும், அவர் இறந்த பின்னர் இந்திராகாந்தி அவர்களையும் பிரதமராக்கினார்.

5. அவர் இறக்கும் நேரத்தில் அவரிடம் இருந்த செல்வம் அவரது மூக்கு   கண்ணாடி,செருப்பு, கதர் ஆடை மற்றும் ரூபாய் 150/-. அவரது அமைச்சர்களும் அவரை போல் எளிமையாக இருந்தனர். உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் தனது இறுதி கால மருத்துவ செலவிற்கு காசு இல்லாமல் ஏழைகளோடு ஏழையாக அரசு மருத்துவமனையில் இருந்தார் என்றால் நம்ப முடிக்கிறதா?

இன்னும் கூறி கொண்டே போகலாம் காமராஜர் பற்றி. அவர் அலங்கரித்த சட்டமன்ற வளாகத்தையும், நாடாளுமன்ற வளாகத்தையும், இன்றைய ஊழல்வாதிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்று நினைக்கும் பொழுது வெறுப்பாக உள்ளது. மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் (இவர் சன் அதிபர் கலாநிதி மாறனின் தந்தை) இலவச சிகிச்சை பெற வேண்டி தனது இறுதி வருடங்களை இலாகா இல்லாத அமைச்சராக கழித்தார். இவர் எங்கே நம் காமராஜர் எங்கே?. கருணாநிதியோ 87 வயது ஆகியும் முதல்வர் பதவியை விடாமல், தமிழ் நாட்டினை தன் குடும்பத்திருக்கு பங்கிட்டு கொடுத்தார். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சட்டமன்றத்தை ஒரு சவால் விடும் களமாக மாற்றிய பெருமை படைத்தவர்கள். இவர்கள் தான் காமராஜர் ஆட்சி தருவதாக பேசி கொண்டு இருக்கும் இன்றைய அரசியல்வா(வியா)திகள். ஜெயலலிதாகளும், கருணாநிதிகளும் மாறி மாறி வந்தும் தமிழகம் இன்னும் மூழ்காமல் இருக்க காமராஜர் அமைத்த வலுவான அடித்தளமே காரணம். நாடு முன்னேற நாளும் உழைத்தவர் காமராஜர், இன்றைய அரசியல்வாதிகள் நாடு முன்னேற ஒரு நாளேனும் உழைத்து இருந்தால் நம் தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலமாக என்றோ மாறி இருக்கும்.

காமராஜரின் வரலாறு அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது வரலாற்றினை படித்து முடித்த பின்னர் நாமும் இந்த நாட்டுக்கு கண்டிப்பாக நம்மாலானவற்றை செய்ய வேண்டும் என்ற ஒரு உத்வேகம் தோன்றும். நம் குழந்தைகளுக்கும் நாம் கட்டாயம் கற்று கொடுக்க வேண்டிய பாடம் காமராஜரின் வரலாறு.

காமராஜர் இறுதி வரை கல்யாணம் செய்யாமல் இருந்து இருக்கலாம், ஆனால் அவரே நம் தமிழகத்தின் தந்தை!!.

இறுதியாக காமராஜர் குறித்து நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய காணொளிகளுடன் இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.







Thursday, September 1, 2011

நமக்கு பிடித்த மகாகவி ..


மகாகவி பாரதியார் பற்றி தெரியாத தமிழர் தரணியில் இருப்பது சாத்தியம் இல்லை. அவரைப் பற்றி நான் புதிதாகக் கூற ஒன்றுமில்லை. அவரது கவிதைகளில் எனக்குப் பிடித்தவற்றின் வரிகளையும், அதன் இசை வடிவத்தையும், 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் - என்ற முதுமொழிக்கிணங்க, இங்கு தொகுத்து தந்து இருக்கிறேன்.

(சில கவிதைகளுக்கான இசை வடிவத்தை என்னால் பெற முடியவில்லை. கிடைத்தவுடன் இந்த பதிவினை புதுப்பிக்கிறேன்.)

1. நிற்பதுவே நடப்பதுவே



நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

2.வெள்ளி பனி மலை



வெள்ளிபனிமலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளிபனிமலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம்
பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

வெள்ளிபனிமலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்

முத்து குளிப்பதொரு தெங்கடலிலே
முத்து குளிப்பதொரு தெங்கடலிலே
மொய்த்து வணிகர்ப்பல நாட்டினர் வந்தே
முத்து குளிப்பதொரு தெங்கடலிலே
மொய்த்து வணிகர்ப்பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்தே
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேர்க்கரையிலே
முத்து குளிப்பதொரு தெங்கடலிலே

வெள்ளிபனிமலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம்
பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

ஆயுதம் செய்வோம் நல்லக் காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்லக் காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்ய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்ய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உன்மைகள் சொல்வோம் பலவண்மைகள் செய்வோம்
உன்மைகள் சொல்வோம் பலவண்மைகள் செய்வோம்

வெள்ளிபனிமலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம்
பள்ளித்தலம் அணைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்...நாங்கள் தோள் கொட்டுவோம்...


3. சிந்து நதியின் மிசை



சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

4.சின்னம் சிறு கிளியே



சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரியவந்தாய்
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்
ஆடி வரும் தேனே...

ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னை போய்
ஆவி தழுவுதடி..
உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான்
கள்வெறி கொள்ளுதடி
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தமாகுதடி

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ ...

சொல்லு மழலையிலே கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய்

இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ

மார்பில் அணிவதற்கே உன்னைப்போல்
வைர மணிகளுண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே
உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ


5. நல்லதோர் வீணை



நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி , சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி ! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?

6.நின்னை சரணடைந்தேன்



நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் (2)
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னைச்)

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னைச்)

துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

7. என்று தணியுமிந்த சுதந்திர தாகம்



என்று தணியுமிந்த சுதந்திர தாகம் ?
என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம் ?

என்றெம தன்னைகை விலங்குகள் போகும் ?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும் ?

அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே

வென்றி தருந்துணை நின்னருள் அன்றோ
மெய்யடியோ மின்னும் வாடுதல் நன்றோ ?

பஞ்சமு நோயுநின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ?

தஞ்சம டைந்தபின் கைவிட லாமோ ?
தாயும்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ ?

அஞ்சல் என்றருள்செயும் கடமையில் லாயோ ?
ஆரிய நீயும்நின் அறமறந் தாயோ ?

வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே
வீர சிகாமணி, ஆரியர் கோனே

பாடல் - 2 (சில வரிகள் மட்டும் இசை வடிவமாக உள்ளது)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

8.காணி நிலம் வேண்டும்



காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; - அடி
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர்மாளிகை
கட்டித்தர வேண்டும் - அங்குக்
கேணி அருகினிலே - தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பனிரெண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்குக்
கத்துங் குயில் ஓசை - சற்றேவந்து
காதில்பட வேணும்; என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய்இளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே - அங்கே ஒரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக்களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேண்டும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா, நின்றன்
காவலுற வேணும்; - என்றன்
பாட்டுத்திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திடவேணும்

9. மோகத்தைக் கொன்றுவிடு



மோகத்தைக் கொன்றுவிடு - அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு - அல்லால் என்றன்
ஊனைச் சிதைத்துவிடு ;
ஏகத் திருந்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்தவளே !
பந்தத்தை நீக்கிவிடு - அல்லால் உயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு - அல்லால் இதைச்
செத்த உடலாக்கு,
இந்தப் பதர்களையே - நெல்லாம் என
எண்ணி இருப்பேனோ ?
எந்த பொருளினுமே - உள்ளே நின்று
இயங்கி இருப்பவளே !
கள்ள முருகாதோ? - அம்மாபக்திப்
கண்ணீர் பெருகாதோ?
உள்ளம் தெளியாதோ? - பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய்சிறு
வேட்கை தவறாதோ ?
விள்ளற் கரியவளே - அனைத்திலும்
மேவி நிறைந்தவளே

10. வந்தே மாதரம்




வந்தே மாதரம் ஜய

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஆரிய பூமியில்
நாரிய ரும்நர
சூரிய ரும்சொலும்
வீரிய வாசகம் (வந்தே மாதரம்)

நொந்தே போயினும்
வெந்தேம் ஆயினும்
நந்தே சத்தர் - உ
வந்தே சொல்வது (வந்தே மாதரம்)

ஒன்றாய் நின்றினி
வென்றா யினும்உயிர்
சென்றா யினும்வலி
குன்றா தோதுவம் (வந்தே மாதரம்)

சோதரர் காள்நிறை
மாதரீர் யாவரும்
ஆதர வொடுபல
தீதற ஓதுவோம் (வந்தே மாதரம்)

தாயே, பாரத
நீயே வாழிய
நீயே சரணினி
நீயே எமதுயிர் (வந்தே மாதரம்)

ஜயஜய பாரத
ஜயஜய பாரத
ஜயஜய பாரத
ஜயஜய ஜயஜய (வந்தே மாதரம்)

10.கேளடா ...மானிடாவா



கேளடா ...மானிடாவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா ...மானிடாவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை

எழைகள் யாருமில்லை ...செல்வம் ..ஏறியோர் என்றும் இல்லை ...
வாழ்வுகள் தாழ்வுமில்லை...என்றும் ..மாண்புடன் வாழ்வோமடா ...

கேளடா ...மானிடாவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா ...மானிடாவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை

வெள்ளை நிறத்தொரு பூனை..எங்கள் வீட்டில் வளருது கண்டீர் ...
பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந் தாலும் - அவை யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது ஏற்றமென் றுஞ்சொல்ல லாமோ?

சாதி பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதி கொடுமைகள் வேண்டாம், - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;
சாதி கொடுமைகள் வேண்டாம், - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

கேளடா ...மானிடாவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா ...மானிடாவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வர்த்திடு மீசன்;
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வர்த்திடு மீசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் -நல்ல மாத ரறிவை கெடுத்தார்
மண்ணுக்குள்ளே சில மூடர் -நல்ல மாத ரறிவை கெடுத்தார்

கண்க ளிரண்டினி லொன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
கண்க ளிரண்டினி லொன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளரிவை வளர்த்தால் - வையம் பேதைமை யற்றிடும் காணீர்.

கேளடா ...மானிடாவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா ...மானிடாவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை


11.அக்கினி குஞ்சொன்று கண்டேன்



அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெட்டி அடிக்குது மின்னல்
கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்
கூ கூவென்று விண்ணை குடையுது காற்று.
சட்ட் சட சட்ட் சட டட்டா
சட்ட் சட சட்ட் சட டட்டா
என்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;
தாளம்கொட்டி கணைக்குது வானம்,

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

12. அச்சம் தவிர்



அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி.
ஈகை திறன்.
உடலினை உறுதிசெய். 5

ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட.
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம். 10

ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல். 15

கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலும் துணிந்துநில். 20

கைத்தொழில் போற்று.
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டு வாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள். 25

சாவதற்கு அஞ்சேல்.
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று. 30

செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்.
சோதிடந் தனையிகழ். 35

சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வத தருளின். 40

ஞேயங் காத்தல் செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க்கு அஞ்சேல். 45

துன்பம் மறந்திடு.
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என்றுணர்.
தேசத்தைக் காத்தல்செய்.
தையலை உயர்வு செய். 50

தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய். 55

நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல். 60

நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு. 65

பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல். 70

பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை. 75

மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல். 80

மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல். 85

யவனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில். 90

ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர். 95

ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ். 100

(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு.

வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு.


13.எத்தனை கோடி இன்பம் வைத்தாய்



எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!

(எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்

(எத்தனை)

முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா

14.காக்கைச் சிறகினிலே


காக்கைச் சிறகினிலே நந்த லாலா - நின்றன்
கரிய நிறம் தோன்று தையே நந்தலாலா !
பார்க்கும் மரங்கள்எல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே நந்தலாலா !
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

15.சுட்டும் விழிச்சுடர்



சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கரு நீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நஷதிரங் களடி

சோலை மல ரொளியோ - உனது
சுந்திர புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது
நெஞ்சில் லலைக ளடி
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திரம் எதுக் கடி
ஆத்திரம் கொண்டவற்கே - கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம் :
காத்திருப் பேனோடி - இதுபார்
கன்னத்து முத்தமொன்று

16 .தீர்த்த கரையினிலே



தீர்த்த கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.
வார்த்தை தவறி விட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடி!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னை போலவே
பாவை தெரியுதடி!

மேனி கொதிக்குதடி - தலை சுற்றியே
வேதனை செய்குதடி!
வாணி லிடத்தை எல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோன திருக்குதடி! இந்த வையகம்
மூழ்கி துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?


17.பாயுமொளி நீ எனக்கு



பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு,
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு; (2)

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! நல்லழகே!
ஊனமறு நல்லழகே ஊறுசுவையே கண்ணம்மா

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே ! நாதவடிவானவளே !
நல்ல உயிரே கண்ணம்மா !

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

18.வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !



பல்லவி
வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய்!

சரணங்கள்
உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா
உயிரின் அமுதாய்ப் பொழிவாய் - கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா
கமலத் திருவோடு இணைவாய் - கண்ணா (வருவாய்)

இணைவாய் எனது ஆவியிலே - கண்ணா
இதயத் தினிலே அமர்வாய் - கண்ணா !
கணைவாய் அசுரர் தலைகள் - சிதறக்
கடைஊ ழியிலே படையோடு எழுவாய் ! (வருவாய்)

எழுவாய் கடல்மீ தினிலே - எழும்ஓர்
இரவிக்கு இணையா உளம் மீதினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா !
துணையே, அமரர் தோலும் வானவனே ! (வருவாய்)

19.வெள்ளைத் தாமரைப் பூவில்



வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் ;
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத்து இருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் ;
கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துள் பொருள் ஆவாள் (வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதுஅ கன்ற தொழில் - உடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈத னைத்தின் எழிலிடை உற்றாள் ;
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள் (வெள்ளைத்)

வஞ்சம் அற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வம் ஆவாள்
வெஞ்ச மர்க்குஉயி ராகிய கொல்லர்,
வித்தை ஓர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகம் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம்
தரணி மீதுஅறி வாகிய தெய்வம் (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் ;
உய்வம் என்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குஉயிர் ஆகிய தெய்வம்
செய்வம் என்றொரு செய்கை எடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம் (வெள்ளைத்)

செந்த மிழ் மணி நாட்டிடை உள்ளீர் !
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர் !
வந்தனம் இவட்கே செய்வது என்றால்
வாழி அஃதுஇங்கு எளிதன்று கண்டீர் !
மந்தி ரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை அன்றாம் (வெள்ளைத்)

வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடுமுற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி

தேடு கல்வி இலாததொர் ஊரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல் ;
கேடு தீர்க்கும் அமுதம்என் அன்னை
கேண்மை கொள்ள வழிஇவை கண்டீர் (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தம் தேசம்
உதய ஞாயிற்று ஒளிபெறு நாடு
சேண்அ கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப்பார சிகப்பழந் தேசம்
தோள்ந லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம்
கல்வித்தேவியின் ஒளிமிகுந்து ஒங்க (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதுஇழைக் கின்றீர் !
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்,
மானம் அற்று விலங்குகள் ஒப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புண்மை தீர்ப்ப முயலும் வாரீர் ! (வெள்ளைத்)

இன்ன றும்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தருமங்கள்யாவும்
பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் (வெள்ளைத்)

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர் !
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர் !
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் !
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்
மதுரத் தேமொழி மாதர்கள் எல்லாம்
வாணி பூசைக்கு உரியன பேசீர் !
எதுவும் நல்கிஇங்கு எவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுதும் வாரீர் (வெள்ளைத்)


20. முருகா!-முருகா!-முருகா!



முருகா!-முருகா!-முருகா!
வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)

சுருதிப் பொருளே,வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)

அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம், சரணம்
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)

அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)

குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)


21.காற்று வெளியிடைக் கண்ணம்மா



காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப் பொன்ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யான்உள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவன் ஆகப் புரியுமே - இந்தக் (காற்று)

நீஎனது இன்னுயிர் கண்ணம்மா ! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின , போயின துன்பங்கள் - நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்
மாஎன்ற பேர்சொலும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனை யே, என்றன், சித்தமே ! இந்தக் (காற்று)

22.மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினபொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண்தி றந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண்வி டுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண்ப யனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம், ஓம், ஓம், ஓம்

23.ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா!-
நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-
ஒரு குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
ரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா! வாலைக் குழைத்துவரும் நாய்தான்-
அது மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி
மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா! செல்வம்
நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல வீரர்
பிறந்ததிந்த நாடு; சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி
கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்; வயிர
முடையநெஞ்சு வேணும்;-இது வாழும் முறைமையடி பாப்பா! 

24. செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள் (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதொர் வையை பொருனைநதி - என
மேவிய ஆறு பல ஓடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்
எத்தனை உண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைகடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத் தின்மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய
தீவு பலவினும் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை இடிக்கும் தலைஇமயம் - எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் தார்தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீனம் மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிப மும்மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

25. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி



வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழியவாழியவே
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம்வீசி
இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்ம...


26. பாருக்குள்ளே நல்ல நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு

சரணங்கள்
ஞானத்திலே பர மோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு - இந்தப் (பாரு)

தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு
தருவதிலே உயர் நாடு - இந்தப் (பாரு)

நன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன்மயில் ஒத்திடு மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு - இந்தப் (பாரு)

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல் கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினிலே உயர் நாடு - இந்தப் (பாரு)

வண்மையிலே உளத் திண்மையிலே - மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாக புலவர்
உணர்வினிலே உயர் நாடு - இந்தப் (பாரு)

யாகத்திலே தவ வேகத்திலே - தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு - இந்தப் (பாரு)

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே - தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி
இனத்தினிலே உயர் நாடு - இந்தப் (பாரு)

தோட்டத்திலே மரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட் டத் திலே அடங் காத நிதியின்
சிறப்பினிலே உயர் நாடு - இந்தப் (பாரு)


27. ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா


போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 1

இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ 2

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ 3

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ. 4

(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா 5

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா 6

இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியி னால் விளக்குவாய் வா வா வா 7

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா 8

28.ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே



பல்லவி

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

சரணங்கள்
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக்கு ஏவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதி ஆச்சு
சங்குகொண் டேவெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாம்எடுத்து ஓதுவோமே (ஆடுவோமே)

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித்தி ருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம் (ஆடுவோமே)

நாமிருக்கும் நாடுநமது என்பது அறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம் (ஆடுவோமே)


29. ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் - பராசக்தி



ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் - பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி - ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

கணபதி ராயன் - அவன்இரு
காலைப் பிடித்திடுவோம்
குணம்உயர்ந்திடவே - விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி)

சொல்லுக்கு அடங்காவே - பராசக்தி
சூரத் தனங்கள் எல்லாம்
வல்லமை தந்திடுவாள் - பராசக்தி
வாழி என்றே துதிப்போம் (ஓம்சக்தி)

வெற்றி வடிவேலன் - அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம் ;
சுற்றிநில் லாதே போ ! பகையே !
துள்ளி வருகுது வேல் (ஓம்சக்தி)

தாமரைப் பூவினிலே - சுருதியைத்
தனிஇருந்துரைப்பாள்
பூமணித் தாளினையே - கண்ணில்ஒற்றிப்
புண்ணியம் எய்திடுவோம் (ஓம்சக்தி)

பாம்புத் தலைமேலே - நடம் செயும்
பாதத்தினைப் புகழ் வோம்
மாம்பழ வாயினிலே - குழல் இசை
வண்மை புகழ்ந்திடுவோம் (ஓம்சக்தி)

செல்வத் திருமகளைத் திடங் கொண்டு
சிந்தனை செய்திடுவோம்
செல்வமெல் லாம்தருவாள் - நமதொளி
திக்கனைத் தும்பரவும் (ஓம்சக்தி)

30.எதிலும் இங்கு இருப்பான்



எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியா
அடியும் முடியும் அறிய முடியா
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் திமி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தவத்திரு உளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுதலைக்கு நெருப்பவன் கொற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
குடுக்கலில் சரம் கொடுத்தவன் தலை முடிற்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
கொற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

31.பாரத சமுதாயம் வாழ்கவே



பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை ;
ஒப்பி லாத சமுதாயம்
உலகத்துக் கொருபுதுமை - வாழ்க !
(பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ...)

சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ ? (புலனில்
வாழ்க்கை யினியுண்டோ ? - நாமிழந்த
வாழ்க்கை யினியுண்டோ ?)

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு -
கனியுங் கிழங்குந் தான்யங்களும்
கணக்கின்றித்தரு நாடு - (இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றி தரு நாடு )

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ? ....
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை எனில்
ஜகத்தினை அழித் திடுவோம் (வாழ்க ! பாரத சமுதாயம் வாழ்கவே !)
(ஜய ஜய ...)

"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - (ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்) - இங்கு
(மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ ?)

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்தியா மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! - (நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! - ஆம் !
எல்லோரும் இந்நாட்டு மன்னர் !) - வாழ்க -
பாரத சமுதாயம் வாழ்கவே
(ஜய ... ஜய)


(குறிப்பு: பின்வரும் கவிதைகளுக்கான இசை வடிவம் எனக்கு கிடைக்கவில்லை. தங்களிடம் இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.)


32. யாமறிந்த மொழிகளிலே -

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ ? சொல்லீர் !
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை ;
உண்மை ; வெறும் புகழ்ச்சி யில்லை;

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ; ஒருசொற் கேளீர் !
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் !

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் ;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் ;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை ;
திறமான புலமைஎனில் வெளிநாட்டோர்
அதைவணக்கம் செய்தல் வேண்டும்

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார் ;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்பு கண்டார்

33. அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

துச்சமாக எண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

பிச்சை வாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

பச்சையூன் இயைந்தவேற் படைகள்வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !


34. வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் ,
வாழிய பாரத மணித்திரு நாடு ,
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க ,
நன்மைவந் தெய்துக, தீதெல்லாம் நலிக ,
அறம் வளர்ந் திடுக, மறமடி வுறுக ,

ஆரிய நாட்டினர் ஆண்மையொ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக !
நம்தே யத்தினர் நாடொறும் உயர்க.
வந்தே மாதரம் வந்தே மாதரம்.

தான தனத்தன தான தனத்தன
தான தந்தா னே

35. ஐய பேரிகை



ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா!
பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம் (ஐயபேரிகை)

இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.
(ஐயபேரிகை)

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.
(ஐயபேரிகை)

36.நின்னயே ரதி




நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)


---------
இறுதியாக நெல்லை கண்ணன் பாரதியார் குறித்து பேசிய காணொளி ...










பாரதி பிறந்த தமிழ் நாட்டில் நானும் பிறந்தேன், அவர் சுவாசித்த தமிழை நானும் சுவாசிக்கிறேன் என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது :-).

"பாரதி தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

பாரதி புகழ் என்றும் வாழ்க !!!.
Related Posts Plugin for WordPress, Blogger...