ஆண்டு 1989 , இடம் - SBOA பள்ளி, நான் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த நேரம். அன்று எனது mid-term தேர்வுக்கான விடைத்தாள்களை கொடுப்பதாக எனது வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். அதை பற்றி அம்மாவிற்கும் தெரியும். நேரம் கடந்தது, விடைத்தாள்களை கொடுக்கும் நேரமும் வந்தது. விடைத்தாள்களும் கொடுக்கப்பட்டன. விடைத்தாள்களை பார்த்த எனக்கு அதிர்ச்சி . மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்தது தான் அதிர்ச்சி க்கு காரணம். நான் தேர்வு எப்படி எழுதினேன் என்பதை கொண்டு எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என்று ஒருவாறு யூகித்துருந்தாலும் , வந்த மதிப்பெண்கள் நான் எதிர்பார்த்ததை விட குறைவு. வீட்டுக்கு சென்றால் அம்மாவிடம் செம திட்டு வாங்க வேண்டுமே என்ற கவலை மேலோங்கி இருந்தது. என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டு இருந்தபொழுது அந்த 'வில்லங்கமான' யோசனை தோன்றியது. அது தான் ஒரே வழி என்று முடிவு செய்தேன். பள்ளி முடிந்தவுடன் அப்பா வருவதற்கு 10 -15 நிமடங்கள் ஆகும். அதற்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். பள்ளி முடிந்தது, நேரே விளையாட்டு திடலுக்கு சென்றேன். நாங்கள் விளையாட அங்கு கம்பிகளை கொண்டு செய்யப்பட்ட ஒரு கன சதுரம் (cube) அமைப்பு இருந்தது. ஏணிகளை வைத்து ஒரு 8 -9 அடி கன சதுரம் (cube ) செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு அமைப்பு அது. அந்த அமைப்பில் எனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தேன். அந்த அமைப்பின் உள்ளிருந்து படிகள் போல இருக்கும் கம்பி வழியாக ஏறி அந்த அமைப்பின் உச்சிக்கு சென்றேன், பின்பு தலைக்கு மேல் இருக்கும் கம்பிகளை ஒன்றன் பின் ஒன்றாக பிடித்து தொங்கி கொண்டே அந்த அமைப்பின் மத்திய பகுதியை அடைந்தேன். அடைந்தவுடன் கம்பி மீது இருந்த என் கைகளை விடுவித்தேன், 'தொப்' என்று என் முன்னம் கால் தரையில் படும் படி விழுந்தேன். தினந்தோறும் நான் அங்கு விளையாடுவதால் அங்கிருந்து விழுந்தால் பெரிதாக அடிபடாது என்று எனக்கு தெரியும். நான் நினைத்தது போலவே முன்னம் காலில் சிறு காயம். வழியும் ஒன்றும் பெருசாக இல்லை.
ஆம் !!. இது தான் அந்த 'வில்லங்கமான' யோசனை. எனக்கு அடிபட்டால், அம்மாவின் நினைப்பு எல்லாம் காயம் மேல தான் இருக்கும், நான் எடுத்த குறைந்த மதிப்பெண்கள் என் காயத்திற்கு முன்னால் அடிபட்டு போகுமல்லவா??. நான் நினைத்தது அப்படியே நடந்தது . நான் வீட்டுற்கு சென்றவுடன், என் அம்மா'வின் கவனம் எல்லாம் காயத்தின் மேல் தான். "அம்மா, midterm test ல மார்க் கம்மி'மா !!" என்று நானே சொன்ன பின்பும் அம்மா "அடுத்த வாட்டி பாத்துக்கலாம்" என்று சொன்னாங்க !!. ஒரு திட்டு கூட திட்டவில்லை. வெற்றி !! வெற்றி !! எனது திட்டம் வெற்றி !! என்று எனக்கு மிகுந்த சந்தோசம் :-).
இன்றளவும் என் அம்மாவிற்கு காயத்திற்கான உண்மை காரணம் தெரியாது என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வு கூட அம்மா ஞாபகத்தில் இருக்குமா என்பது சந்தேகமே :-). இது திருட்டுத்தனமா?? புத்திசாலித்தனமா??
அசட்டுதைரியமா ?? தெரியலை. ஆனால் நேற்று நடந்தது போல என் மனதில் எப்போதும் நிற்கும் நிகழ்வு :-). "எதையும் பிளான் பண்ணி பண்ணனும்கிறதுக்கு" ஒரு நல்ல எடுத்துக்காட்டு :-)

ஆஹா, இப்படி ஒரு மறுபக்கமா? எப்படி Srini ? :-) ஒருவேளை உங்க அம்மா இந்த blog பார்த்தா உங்க தலைப்புக்கு விடை கிடைக்கும் ;-)
ReplyDeleteellam oru thairiyam dhaan :).. antha thairiyaman srini eppa enga errukannu theriyala... :(
ReplyDelete