Tuesday, June 24, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? - தொடர் பதிவு

தொடர்  பதிவின் தொடர்ச்சியாக நண்பர் கிரேஸ் அவர்கள் கேட்ட 10 கேள்விக்கான பதில் இதோ :)

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
100 வது பிறந்த நாளா?? வைரமுத்து கூறியது போல 'எட்டாம்' எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்லை என்பதே என் கூற்றும்... அப்படியே நான் தவறி போய் இருந்தா, என்னோட பிறந்த நாளை எல்லாரும் கொண்டாடும் படி இருக்கணும் (பேராசை தான்.. but, பரவாலை :-))

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
'அலுவலக வேலையை' போல மற்ற வேலையிலும்  ஒழுங்காக கவனம் செலுத்த.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
முதல் கேள்விக்கான பதில் எழுதும் பொழுது :)

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
கார்/பைக் எடுத்து ஒரு பயணம் போவேன். மனைவியுடன் எங்கையாச்சும் 'outing' போவேன். 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
கண்ணா, இதை படினு சொல்வேன்  http://covaiveeran.blogspot.com/2012/02/marriage.html  :)

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
உலக மக்களை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் மீது அக்கறை காட்டும் யாரிடமும் 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
என்ன தகவல் என்பதை பொறுத்து தடுக்க முயற்சி செய்வேன். 

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
"இதுவும் கடந்து போகும்னு" சொல்வேன். 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
பாதி நேரம் அலுவலக வேலை பார்ப்பேன். கொஞ்சம் 'xbox' விளையாடுவேன். மூடு இருந்தா புத்தகம் படிப்பேன். 

12 comments:

  1. சுருக்கமாக இருந்தாலும் நறுக்...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. Nice answers :) 1000 likes for 6th one!!
    Request from viewer: Please try to write at-least one post every month ;)

    ReplyDelete
    Replies
    1. Sure dear :). I will try :)

      Delete
    2. கண்டிப்பா கிரேஸ்.. முயற்சி செய்கிறேன் :)

      Delete
  3. நன்றி ஸ்ரீனி.
    //'அலுவலக வேலையை' போல மற்ற வேலையிலும் ஒழுங்காக கவனம் செலுத்த.// அப்பாடா..வலைத்தளத்திலும் கவனம் செலுத்துவீங்க தானே?
    அனைத்துப் பதில்களும் அருமை..கடைசி கேள்விக்கு ஏனுங்க அலுவலக வேலை பார்க்கிறீங்க?

    ReplyDelete
    Replies
    1. வலைத்தளம் பொழுதுபோக்கு விஷயம் தானே.. கிரிக்கெட் பாக்கறது, facebook பாக்கறது, xbox விளையாடுறது etc.. அது எல்லாம் கூட 'work' விட நல்ல பண்ணுவேன். ஒழுங்காக புத்தகம் படிக்கறது, உடற்பயிற்சி செய்வது இது எல்லாம் தான் சொன்னேன் :).
      அது என்னமோ தெரியல கிரேஸ்.. தனியா இருந்தா 'ஆபீஸ் லேப்டாப் தான் துணை..அப்புறம், நாம தனியா இருக்கும் பொது வேலையை முடிச்சிட்டா.... அப்புறம் ப்ரீயா ஊரு சுத்தலாம் பாருங்க :)

      Delete
  4. Liked your answer for question 5. :-) Great.
    My best wishes Srini.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இமா அவர்களே :)

      Delete
  5. அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த நன்றி நண்பரே :)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...