Sunday, March 16, 2014

புலியின் சீற்றம்


மருந்துக்காக அழித்தாய், 
மாந்திரிகத்துக்காக அழித்தாய், 
எனை அழிப்பதனால் காட்டினையும்  
அழிக்கிறாய் என உணர்ந்தாயா? 

வயிற்றுப் பசிக்கு  வேட்டையாடும் 
எனை கொடிய மிருகம் என்கிறாய், 
பணப் பசிக்கு இனத்தையே வேட்டையாடும் 
உனை என்ன சொல்லி அழைக்க?

பல லட்சமாக காடுகளை ஆண்ட 
எனை சில நூறாக குறைத்தாய்,
நான் சுவடின்றி அழியும் வரை 
உன் கொலை வெறி அடங்காதா?

தேசிய விலங்கென, வீரத்தின்
சின்னமென அடையாளம் தந்தாய்,
இன்றோ எனை அழியும் இனங்களின்
அடையாளமாக மாற்றியது ஏனோ?

நானும் உனை போல இப்புவியில்  
வாழ உரிமை பெற்ற இனமன்றோ !!
ஆறறிவு பெற்றதனால் மட்டுமே, நீ
தனியே வாழ முடிவெடுத்தாயோ?

பரிணாம வளர்ச்சியில் நீ பெற்ற
அறிவு எனை அழிக்கத்  தானா? 
இப்பொழுதேனும் விழிப்பாய் மனிதா !!
நீயும் வாழ் .. என்னையும் வாழ விடு !!

10 comments:

  1. லோகநாதன்March 17, 2014 at 2:18 AM

    வாழு! வாழவிடு!! :-)

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னதே சொல்லுரே... புதுசா எதாச்சும் சொல்லு மச்சி.

      Delete
  2. இன்றோ எனை அழியும் இனங்களின்
    அடையாளமாக மாற்றியது ஏனோ?
    >>
    பேராசையும், அலட்சியமும்தான் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை....நன்றி ராஜி அவர்களே :)

      Delete
  3. நன்று..நன்று...
    புலிகளைக் காப்போம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக காக்க வேண்டும் !!. நன்றி கிரேஸ் :)

      Delete
  4. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! இப்பொழுது நீங்கள் நிறைய எழுதவேண்டும் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ் :). கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

      Delete
  5. இப்பொழுதேனும் விழிப்பாய் மனிதா !!

    புலிக்குரல் ...! விழிப்புணர்வு தரட்டும்..!

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே :)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...