Wednesday, October 31, 2012

நவீன நவரசம்



மின்வெட்டு குறித்து நமது முதல்வரும், முன்னாள்
முதல்வரும் பேசும் பேச்சைக் கேட்கும்
பொழுது நகை உணர்வு,

மின்வெட்டு காலத்திலும் வரும் மின் கட்டணம்
பார்க்கும் பொழுது அழுகை உணர்வு,

மின்வெட்டுக்கு காரணமான ஆட்சியாளர்களைப் பற்றி
பேசும் பொழுது இளிவரல் (இகழ்ச்சி) உணர்வு,

மின்வெட்டால் பாதிக்கப்படும் சிறு தொழிலாளர்களை
நினைக்கும் பொழுது மருட்கை(மயக்க) உணர்வு,

இன்னும் எத்தனை நாள் மின்வெட்டு நீடிக்கும் என்று
நினைக்கும் பொழுது அச்ச உணர்வு,

'கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தா சரியாகிவிடும்' என்று ஆட்சியாளர்கள் கூறியதை நம்பியதை நினைக்கும்
பொழுது வெகுளி உணர்வு,

நமக்கு மின்சாரம் இல்லாத போதும், நமது தொகுப்பில் இருந்து
அண்டைய மாநிலத்திற்கு செல்லும் மின்சாரத்தை குறைக்காமல்
இருப்பதை நினைக்கும் பொழுது பெருமித உணர்வு,

போன மின்சாரம் திரும்பி வரும் பொழுது
உவகை (மகிழ்ச்சி) உணர்வு,

என்றுமே மின்வெட்டில் இருக்கும் பல்லாயிரம்
மக்களைப் பற்றி நினைக்கும் பொழுது அமைதி உணர்வு,

என நவரசத்தையும் தருகிறது (தமிழக) மின்சாரம் !!

6 comments:

  1. கலக்குங்க ஸ்ரீனி! வித்தியாசமான ஒன்பது ரசங்கள்! ரசித்தேன்!

    ReplyDelete
  2. நர்த்தகி ஸ்ரீலங்காNovember 2, 2012 at 2:54 AM

    வணக்கம் அன்பரே!
    உமது சிந்தனையையும், கருத்தையும் காண்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க, வளர்க உமது தமிழ் சேவை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நர்த்தகி அவர்களே !!

      Delete
  3. Veguli/Uvagai/Nagai all correspond to the basic emotion 'Joy'. So I suppose 2 or 3 basic emotions aren't covered, for instance Love, Wonder and Anger.
    Would be great if you could complete it with all the basic forms.

    Good that I got to learn the word - Marutkai :)
    Suggest a good tamil agarathi converter.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சதா...எனக்குத் தோன்றிய ஒன்பது விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன் :-).. தமிழ் அகராதி - http://ta.wiktionary.org/wiki/

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...