Friday, September 7, 2012

நாம் பேசும் தமிழ் (?!)

புருக்பீல்ட்ஸ் (Brookefields) மாறி வரும் கோவையின் புதிய அடையாளம். இந்த மாற்றத்தில் மிக முக்கியமான ஒன்று கொங்கு தமிழுக்கு சாவு மணியடித்து விட்டு ஆங்கிலத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது. அதற்கு உதாரணமாக நிற்கிறது புருக்பீல்ட்ஸ்.


புருக்பீல்ட்ஸ் - கோவைக்கு விஜயம் செய்து இருக்கும் ஒரு வணிக-கேளிக்கை வளாகம் (Multiplex). சென்ற வாரம் தான் புருக்பீல்ட்ஸ் போக நேர்ந்தது, வழக்கம் போல தனியாகத் தான் :-). புருக்பீல்ட்ஸை நெருங்க நெருங்க, 'புருக்பீல்ட்ஸ்' என்ற 'ஆங்கில' எழுத்துக்கள், மின் விளக்கின் ஒளியால் மின்னி, என்னை வரவேற்றது. ஆம், கோவை இங்கிலாந்தில் அல்லவா இருக்கிறது. இங்கு ஆங்கிலம் மின்னினால் தான் மரியாதை. தமிழ் மின்னினால் அவர்கள் மரியாதை என்னாகும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் என் கண்ணில் பட்டவை குறியீடுகள். அனைத்து குறியீடுகளிலும் ஆங்கிலம் (ATM, Lift Lobby, Staircases, Escalator, More shops etc). தவறிக்கூட தமிழ் இருக்கக் கூடாது என்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பது தெரிந்தது. கோவை தமிழகத்தின் ஒரு பகுதி என்று எனது புவியியல் ஆசிரியர் தவறாகச் சொல்லி கொடுத்து இருக்கிறார் என்பது புலனானது.

ஆர்.எம்.கே.வீ சில்க்ஸ், ரிலையன்ஸ் டிறேண்ட்ஸ் ஆகிய கடைகள் தவிர நான் சென்ற அனைத்துக் கடைகளிலும் என்னிடம் பேசிய முதல் மொழி (அரைகுறை) ஆங்கிலம் தான் (Do you need help?, What mode of payment Debit or Cash?, Do you need a carry bag?, This cost 500 rs). இறுதியாக 'தி சினிமாஸ்' (சதயம் சினிமாஸ் இன் கோவை கிளை) சென்றேன். அங்கும் அதே நிலைமை. நான் தமிழில் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் வந்தது ஆங்கிலத்தில். நான் என்ன பார்க்க வெள்ளைக்காரன் மாதிரியா இருக்கேன்?. முதலில் தமிழில் பேச வேண்டியது தானே அப்புறம் கேட்பவருக்குப் புரியவில்லை என்றால் வேறு ஓர் மொழிக்கு மாற வேண்டியது தானே?. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவர்களின் முதலாளிகள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று கூறி இருப்பார்கள் போலும்.

நம்மவர்கள் எப்பவும் நினைப்பது பகட்டான இடங்களுக்கு சென்றால் ஆங்கிலத்தில் (அரைகுறை என்றால் கூட) பேசினால் தான் மரியாதை என்று. எனவே கடை முதலாளிகளும் தங்களை பகட்டாக காட்டிக் கொள்ள ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள். புருக்பீல்ட்ஸ் உம் இதற்கு விதிவிலக்கல்ல. வெகுவாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்த இந்த பழக்கம் சிறு நகரங்களில் ஊடுருவி, இன்று கிராமங்கள் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலைக்கு நாம் அனைவரும் காரணம். ஒரு மொழி நீடித்து வாழ அந்த மொழி பாமரனிடம் வாழ வேண்டும். ஆனால் தமிழ் இன்று பாமரனிடம் அழிந்து கொண்டு இருக்கிறது. நாம் நடைமுறையில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது அம்மா அப்பா பயன்படுத்தும் பல சொற்களை இன்று நம் பேச்சு மொழியில் பயன்படுத்துவது கிடையாது (வலது, இடது, தமிழ் மாதங்கள், திசைகள் இன்னும் பல). இது தொடர்ந்தால் அடுத்து வரும் சந்ததியினர் சொற்களைத் தாண்டி நம் மொழியினையே பயன்படுத்தாமல் நிறுத்தி விடுவார்கள்.

அந்த ஒரு அவல நிலை வராமல் தடுக்க நாம் முடிந்த வரை தமிழில் பேசுவோம். அதற்காக தமிழ் புலவர்களாகச் சொல்லவில்லை. "இவன் என் Friend" என்று சொல்லும் இடத்தில் "இவன் என் நண்பன்" என்று சொல்லலாம். "Thanks" என்று சொல்வதற்கு பதில் "நன்றி" என்று சொல்லலாம். கைபேசி எண் சொல்லும் பொது ஒன்று, இரண்டு என்று தமிழில் சொல்லலாம். இது போன்று நம் நடைமுறை வாழ்க்கையில் வெறும் பகட்டுக்காக பேசும் ஆங்கிலச்சொற்களை தவிர்த்து தயக்கமின்றி தமிழ் சொற்களை பயன்படுத்துவோம். முடிந்த வரை தமிழில் பேச முயற்சிப்பவரையும் 'தமிழ காப்பாத்த வந்துட்டான்டா' என்று ஏளனம் செய்யாமல், அவர்களை உற்சாகப்படுத்துவோம்.

தமிழக அரசும், தமிழ் அறிஞர்களும் தமிழுக்கு என்று மாநாடுகள் நடத்துவதோடு நில்லாமல் உலகின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழாக்கம் கொடுத்து, அவற்றை அகராதியில் ஏற்றி அனைத்து தமிழன் கையில் போய் சேரும் படி செய்ய வேண்டும்.

இவை எல்லாம் நடந்தால் புருக்பீல்ட்ஸ்களிலும் தமிழ் வாழும். இதை செய்ய தவறினால் தமிழ் சமஸ்கிருதம் வழி சென்று வெறும் ஏட்டு மொழியாக மாறும். முடிவு நம் கையில் இல்லை இல்லை நம் நாவில் !!.

24 comments:

 1. Replies
  1. நன்றி நண்பா !!

   Delete
 2. KhaNNaa! dhooL tucker maa.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தலைவா !!

   Delete
 3. Maybe because of the floating population of neo cities, it is convenient that you have sign boards and conversation start in common language.. (btw.. i think you look like telugu if not caucasian..so the store keeper might had confused :-). Don't we expect to see english in the bus board, shops and people to speak in english/tamil when in bangalore??

  Why dont you research on how much % of english mixed in the present Colloquial languages - Hindi Vs Tamil. Then it would be evident if the issue is persistent across or its only the fate of tamil.. solution without knowing the cause may not be of use.

  ReplyDelete
  Replies
  1. டேய்...நான் சோழப் பரம்பரை டா :-)... அந்த பொது மொழி தமிழகத்தில் தமிழாக இருக்க வேண்டும்... விருந்தாளிக்காக வீடு கட்ட முடியாது.. நமக்காகத் தான் வீடு கட்ட வேண்டும்.. வரும் விருந்தாளி தொடர்ந்து தங்க வேண்டும் என்றால் நமது பழக்கத்தை கற்று கொள்ள வேண்டும். எனக்கு ஹிந்தி, கன்னடம் பற்றி தெரியாது .. பெங்களூரில் இருந்ததனால், கன்னடமும் இந்த நிலையில் தான் இருக்கிறது என்று ஒரு அளவு உறுதியுடன் கூற முடியும் ..

   Delete
 4. empty boasting glaring your vision!
  all the big houses (of big shots in TN) belong to these so called guests...even your thalaivar is one such long staying guest..

  be secular.. dont talibanize tamil

  ReplyDelete
  Replies
  1. விருந்தாளிகள் வர வேண்டாம்னு சொல்லலை... நம்ம பழக்கத்தை கற்று கொள்ள வேண்டும்..விருந்தாளிக்காக வீட்டை மாற்ற வேண்டாம்னு தான் சொல்றேன்... தமிழ்ல பேசச் சொன்னா அது 'Secular' இல்லையா என்ன கொடுமை சதா இது ??

   Delete
 5. its deviating to guest etiquette
  coming back to initial discussion, given an option people tend to choose the most convenient, least cumbersome and highly beneficial route...
  so by following your corrections, who gets benefited..

  ReplyDelete
  Replies
  1. தமிழ் வாழும்.. அது தான் இதனால் கிடைக்கும் நன்மை..

   Delete

  2. இன்னைக்கு காலைல என்ன செஞ்சன்னு கேட்டா.. 'Early morning alarm வச்சு எந்திரிச்சு, Brush செஞ்சுட்டு, Breakfast முடிச்சிட்டு, Bike Start பண்ணி, Heavy Traffic இருக்கிற அந்த Roadல one hour travel செஞ்சு office reach பண்ணி, bikea parking lotல போட்டுட்டு fifth floorல இருக்கிற என்னோட office போய், system on பண்ணி seatla உட்காரதுக்குல போதும் போதும்னு ஆயிடுது" இது தான் இன்னைக்கு நீயும் நானும் பேசும், தமிழ் சொற்களை விட ஆங்கில சொற்கள் இருக்கும், 'தமிழ்'. இத மாத்தணும்னு சொன்னா, IIM CATக்கு படித்த ஆங்கில வார்த்தைகள வச்சு 'Convenienta இல்லை, cumbersomeaa இருக்குனு சொல்லற.. தப்பை தப்புனு தெரியாம இருக்கிற உன்னை திருத்த, இந்தியன் தாத்தா போல ஒரு தமிழன் தாத்தா வரணும்.... பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்ல யார் அதிகம் மதிப்பெண் எடுப்பாங்கனு என் கூட போட்டி போட்ட சதா எங்கே??..அந்த தமிழ் ஆர்வம் எங்கே??

   Delete
 6. Tamila Pesanumna - AASAI
  Tamila mattum thaan pesanumna - PERAASAI!!

  Its a pity that your parents wasted lot of money to make you study in English medium until college and yet you consider simple words like "cumbersome" to be at the strata of IIM.

  I dont agree on most of your phrase quotes..for instance 'early morning', 'breakfast', 'travel', 'parking lot' in your sentences are not I have heard in common. And I would be interested to know the tamil word for ALARM?

  I like tamil and certainly would not consider talking in it as denigrating or talking in english as status symbol. But quizzed as to what is that "TAMIL" you are concerned about. As I know Tamil has been undergoing transformation since its inception.. So you want people to adopt BC version of tamil or AD? If so which century then...

  By the way do you really think that your present sustenance of life is because of Tamil? or because you know the language of the upper power.??

  ReplyDelete
  Replies
  1. ஆம் உண்மை. என்னோட பெற்றோர் SBOA வில் சேர்த்து தப்பு பண்ணிட்டாங்க. நான் SBOA வில் படித்தவன் என்று சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. கண்டிப்பா உன்ன மாதிரி எனக்கு ஆங்கிலம் வராது. caucasian, strata இந்த வார்த்தைகளை எல்லாம் நான் கேள்வி பட்டது இல்லை. சரி..விசயத்திற்கு வரேன். நான் ஆசை தான் படுறேன், பேராசை படலை. Early morning', 'breakfast', 'travel', 'parking lot' இத எல்லாம் நீ பயன்படுத்தலைனா ரொம்ப நல்லது. நான் சொல்லுவது எல்லாம் முடிந்த வரை தமிழ் பேசுவோம்னு தான். அதுக்காக எல்லாரும் உடனே செந்தமிழ பேசுனுனோ எல்லாரும் தமிழ்ல பட்டப் படிப்பு படிங்கன்னுனோ சொல்லலை. நீ சொல்வது போல பல வார்த்தைகள் தமிழ்ல சொன்ன நமக்கே புரியாது என்பது கசப்பான உண்மை (Alarm தின் தமிழாக்கம் இங்கே காணலாம் http://ta.wiktionary.org/wiki/alarm_clock). இன்னும் பல அறிவியல் கண்டுபிடிப்புக்கான தமிழ் சொற்கள் நம் வழக்கு மொழியில் இல்லை, வெறும் ஏட்டுச் சுரக்காயாக உள்ளது. அது போன்ற சொற்களுக்கு ஆங்கிலம் தான் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதை நடைமுறையில் கொண்டு வருவது அரசாங்கத்தின் கையில் உள்ளது. ஆனால் அனைவருக்கும் தெரிந்தச் சொற்களை தயக்கம் காரணமாக பயன்படுத்தவில்லைனா அதுவும் ஏட்டுச் சுரக்காய் ஆகிவிடும். என்னோட வாழ்வாதாரத்திற்கு ஆங்கிலம் பெரும் உதவியாக இருந்தது என்பதை மறுக்கவில்லை. இன்றைய சுழலில் அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்காகத் தமிழை மறக்க வேண்டாம். வெறும் பகட்டுக்காக ஆங்கிலத்தை பயன்படுத்தாமல், தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும்னு தான் சொல்றேன். மற்ற மொழியை கத்துக்கோ ஆனா தமிழை மட்டும் நேசி :-)

   Delete
  2. khaNNaa, this comment is much better than the blog content! good flow.

   Delete
  3. நன்றி தலைவா !!

   Delete
 7. atlast..some sensible quotes..

  ReplyDelete
  Replies
  1. அப்பாடி கடைசியா நான் சொல்ல வந்ததைப் புரிஞ்சிக்கிட்ட... மகிழ்ச்சி !!

   Delete
 8. Glad that I made you accept what is reality

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா.. இது வேரையா..

   Delete
 9. என்னங்க ஒரே அனானி ராஜ்யமா இருக்கு. நான் அப்பறமா வர்றனுங்க.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா..வருக வருக :-)

   Delete
 10. COvaiveeran kottaaviveeran aagivittaan POlum? 07Sep2012 piRagu blog edhuvum publish seiyyakkaaNOm. indRu dhinam 23Oct2012.

  kuRippu: unga power-cut'um idhukku oru kaaraNaMO? :p

  ReplyDelete
  Replies
  1. khaNNaa! en kalaiulaga aNNaa kamalhaasan avargaL POtta comment'ku en response illa'maa? idhukku reply paNNaadhavangaLa udhaikkanum.


   PS: sorry naan uNarchivasappattu udhaikkanum'nu sollitten. mannikkavum :(

   Delete
  2. Haha.. kalkkurae KhaNNaa..

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...