Monday, August 13, 2012

விழித்து எழு தமிழா !!

உலகின் முதல் கப்பல் படை, யானைப்படை நிறுவி,
போர்கள் பல வென்று தரணி ஆண்ட எம் தமிழினம் !!
பொது மறையாம் திருக்குறள் தந்து உலகினுக்கு 
வாழ்க்கை நெறியை கற்று தந்த எம் தமிழினம் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோள்களின்  
அமைப்பையும், தாக்கத்தையும் அறிந்திருந்த எம் தமிழினம் !!
ஓர் அறிவு உயிர், ஈர் அறிவு உயிர் என தொல்காப்பியம் மூலம் 
டார்வினுக்கு முன்னரே உயிரின் தோற்றத்தை 
கூறியிருந்த  எம் தமிழினம் !!
உலோகம் பற்றி  ஏனைய நாடுகள் அறியாத காலத்தில் 
அவற்றை கொண்டு அழகிய சிலைகள் தந்த எம் தமிழினம் !!
பெரிய கோவில், மகாபலிபுரம், மீனாட்சி அம்மன் கோவில் என
கட்டிடக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்த எம் தமிழினம் !!
அணுவின் சக்தி குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு 
முன்னரே  பாடிய எம் தமிழினம் !!
பல நூறு சித்தர்களையும், அவர்கள் மூலம்
சித்தவைத்தியத்தையும்  தந்த எம் தமிழினம் !! 
ஆதிவாசியாய் ஏனைய உலகம் இருந்த பொழுதும் 
(கல்)அணைக் கட்டி, யானை கொண்டு போரடித்து 
விவசாயம் செய்த எம் தமிழினம் !!
இன்னும்  எண்னில் அடங்கா  மேன்மை
வாய்ந்த எம் தமிழினம்  இன்று,
தன் முன்னே சொந்த சகோதர்(ரி)கள் சாகக்கண்டும், 
ஒன்றும் செய்ய இயலாத கோழை இனமாக மாறியது ஏனோ?
'அம்மா', 'அப்பா'வை விடுத்து, 'மம்மி'களையும், 'டாடி'களையும்,
அரவணைத்து கொண்டது ஏனோ?
தன் வாழ்க்கை நெறியை தவிர்த்து, மேற்கத்திய 
வாழ்க்கை முறைக்கு மாறியது ஏனோ?
அறிவு மழுங்கி மேற்கத்திய நாடுகளுக்கு உழைக்கும் 
அடிமைகளானது ஏனோ?
தமிழன் என்ற  கர்வத்தினை, இறுமாப்பினை இழந்து 
தமிழன் என்று சொல்லக்கூட  தயங்குவது ஏனோ?
10000 ஆண்டுகள் மேற்ப்பட்ட நம்  மேன்மையை, அறிவை. 
800 ஆண்டுகளே ஆக்கிரமித்த முகலாயர்களிடமும், 
ஆங்கிலேயர்களிடமும் பறி கொடுத்து விட்டோமா? 
இந்நிலை மாற வேண்டாமா? 
நம் அடிமை மோகம் தனிய  வேண்டாமா? 
இழந்த  மேன்மையை மீட்க வேண்டாமா? 
ஆழந்த நித்திரையில் இருக்கும் நாம்..
விழித்து எழுவோம்  !! வீறு கொண்டு எழுவோம்  !!
தமிழினத்தின் பெருமையை  ஆராய்ந்து அறிந்து 
உலகினுக்கு  உரக்கச் சொல்வோம் !!. 
இழந்த  மேன்மையை  அடைவதற்கான
இந்த முதல் படியினை எடுத்து வைப்போம் !!
தமிழைக் கற்று உணர்ந்து மேலும் மேன்மையடைய
இன்னும் பல சாதனை செய்வோம் !!
நம் மொழி தொன்மையானது என்ற பெருமையை
காத்து நம் சந்ததியினர்க்கு வழங்குவோம்!!
பின் விடியல் பிறக்கும்  நம் தமிழுக்கும்,  நம் தமிழினத்திற்கும் !!

18 comments:

 1. Super khaNNaa! ha ha ha...

  ReplyDelete
  Replies
  1. Nandri Thalaiva.. mr.log why this aalmaratam ??

   Delete
 2. nandRu machi! vizhithu ezhuvaayaagaa, ezhuVOmaaga! :)

  thamizhai EAttu suraikkaayaaga maatRi pala aaNdugaL uruNduvittadhu!

  NOTE: about first comment, i don't know machi

  ReplyDelete
  Replies
  1. Nandri machi.. first comment is from ur clone :-)

   Delete
 3. Nalla irukku Machi! Thought provoking!

  ReplyDelete
 4. ironic!! Is the author stating his own condition?
  The author works for US company and will continue to work for them.
  He doesn't wear dravidian dresses. His favorite food is mexican (somewhere mentioned in the same blog i suppose)
  If his brotherhood infers to srilankan issue.. whoh.. thats a dangerous arena.

  Anyway the language, facts and knowledge is impressive :)

  ReplyDelete
  Replies
  1. சதா .. நன்றி டா உன்னோட கருத்துக்கு :-).. ஆமா நான் அமெரிக்க நிறுவனத்துல தான் வேலை பாக்குறேன்.. (ஆனா கண்டிப்பா எனக்கு பிடித்த உணவு மெக்சிகன் இல்லை.. நம்ம ஊரு பணியாரம் தான்).. இங்க 'தமிழா' என்று சொல்லி இருக்கிறது என்னையும் சேர்த்து தான்.. நானும் அந்த அடிமை கூட்டத்துல ஒருத்தன் தான். நாம் எல்லாரும் விழித்து எழ வேண்டும்.. குறைந்தப்பட்சம் நம்ம முன்னோர்களின் சாதனையையும், அறிவையும் தெரிந்து கொள்ள வேண்டும்.. அது கண்டிப்பா நமக்கு ஒரு நம்பிக்கையை தரும். நாம் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்தாச்சு, உடனே நாம் முதலாளி ஆகா முடியாது. முதலில் நாம் அடிமை என்பதை உணர வேண்டும் அது தான் முதல் படி, அப்ப தான் நாம் இந்த அடிமைச் சங்கிலியை உடைக்க முயற்சி செய்வோம். இந்த பதிவும் நாம் அடிமை என்பதை உரக்க சொல்வதற்கான ஒரு முயற்சியே. நமது முன்னோர்களின் சாதனையை நாம் அறிவதோடு மட்டும் இல்லாமல் நம் அடுத்த தலைமுறைக்கும் கற்றுத்தர வேண்டும், நமது மொழிக்கும், வாழ்க்கை முறைக்கும், மருத்துவம் விஞ்ஞானம் என அனைத்தும் நிறைந்த நம் சங்க இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரை இது ஒரு தொடர் ஓட்டம்.. நாம் ஓட்டத்தை தொடங்கி வைப்போம். நம்ம பிள்ளைகள் அதை தொடருவாங்க, ஒரு நாள் இலக்கையும் அடைவாங்க என்ற நம்பிக்கையுடன். இதை நாம் உணராமல் அடிமைகளாய் இருப்பதில் சந்தோசம் அடைந்தோமென்றால்.. நமது மொழி, இனம், வாழ்வியல் முறை என் அனைத்தும் அழிந்து போகும்..

   Delete
 5. Oh great...
  So we are expecting to see you marry a sister from the ancestral brotherhood who specializes in paniyaaram preparation (or maybe american dosa from dosa plaza). And your production of next generation (which would by default get US citizenship) is able to learn tamil, its literature (by the way, except for couple of novels how much of sanga elakiyam you have read) and its culture being among foreign nomads.

  PS: Comments and replies are only for fun and fiction. No resemble or relevance to anybody in production/pipeline.

  ReplyDelete
  Replies
  1. உனக்கு புரிய மாட்டிங்குது... நான் அமெரிக்க குடிமகன் ஆகபோறது கிடையாது..என் பிள்ளை கண்டிப்பா தமிழ்நாடுல தான் வளரும்...கண்டிப்பா என் பிள்ளைக்கு தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்துவேன்...சங்க இலக்கியங்கள் இது வரை நான் பெருசா படிக்கல தான்.. அதன் சிறப்புக்கள் பற்றி படித்தப் பின் நான் அதை செய்ய தொடங்கி இருக்கேன்..மறுபடியும் சொல்லறேன் இந்த பதிவில் கூறி இருக்கும் அனைத்தும் என்னையும் சாடி தான்.. ஏனா நானும் இக்கால தமிழனே!!.. நானும் மாற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்... என்னை கிண்டல் அடிக்காம நீயும் உருப்படியா ஏதாச்சும் செய்யுடா :-)

   Delete
 6. KhaNNa, idhappaarummaa.. dhooL tuckker!

  http://www.youtube.com/watch?v=G-DdhWjGcLg&feature=related

  ReplyDelete
  Replies
  1. நல்ல பேச்சு அழமானக் கருத்து..பகிர்ந்தமைக்கு நன்றி!!

   Delete
 7. நல்ல பதிவு. நம் வரலாறை தெரிந்துகொண்டு நம் பெருமை உணர்ந்தோமானால் தமிழும் நம் வாழ்வும் ஏன் உலகமே செழிக்கும்.
  எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமில்லை, கிளைகளை பரந்து பரப்பி வேர் மட்டும் முறியாமல் பார்த்து கொண்டால் போதுமானது.
  நம் கல்விச் சூழலில் பிள்ளைகளுக்கு பற்றும் ஆர்வமும் வருமாறு கற்றுக்கொடுப்பதில்லை என்பது கசப்பான உண்மை. வளர்ந்து சுய முயற்சியால் புரிந்து கொண்டு கண் திறக்கும் உங்களையும் உங்களைப் போன்ற பலரையும் பாராட்ட வேண்டும். இந்த கண் திறப்பு மிகவும் தேவையாக இருக்கிறது இன்றைக்கு. தமிழின் தமிழினத்தின் மேன்மை சொல்வது மட்டும் அல்ல, இன்றைய வாழ்க்கைத் தேவைகளின் முன்னேற்றங்களை தமிழில் மொழிபெயர்த்தும் தமிழில் ஏதேனும் கண்டுபிடித்தும் உயர்வோமாக! வாழ்த்துக்கள் ஸ்ரீனி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கிரேஸ்..தமிழ் இலக்கியங்கள் பற்றிய கண் திறப்புக்கு நீங்களும்,உங்கள் பதிவுகளும் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகது. மேலும் இந்த பதிவுக்கு தாங்கள் வழங்கிய ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி :-)

   Delete
 8. எனக்கு தெரிந்த குழந்தை தன் தமிழ் ஆசிரியரிடம் இரண்டு சுழி ன, மூன்று சுழி ண எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்று சந்தேகம் கேட்டபொழுது, "என்னைத் தொந்திரவு செய்யாமல் அமைதியாகப் போய் உட்கார்" என்று சொன்னாராம். எவ்வளவு பெரிய பொறுப்பில்லாத்தனம். பெரிய காவியங்கள் படைக்க வேண்டாம், இந்த நிலையேனும் மாற வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை கிரேஸ் !!. எவ்வளவு சிறந்த அறிஞர்கள் இருந்தாலும், ஒரு மொழி வாழ, பாமரனிடம் அந்த மொழி வாழ வேண்டும். சமஸ்கிருதம் இன்று வெறும் ஏட்டில் மட்டும் இருப்பதற்கு இதுவே காரணம். Bus, chair, hospital, doctor, operation, friend , இது எல்லாம் இப்போதைய பாமர தமிழனின் 'தமிழ் சொற்கள்'. இந்நிலை மாற வேண்டும். நம் தமிழ் அறிஞர்கள் தமிழுக்கு என்று ஒரு நிலையான அகராதி உருவாக்கி, அதை காலத்திருக்கு ஏற்ப புதுப்பிப்பதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு தமிழன் கையிலும் போய் சேரும் படி செய்ய வேண்டும்!!.

   Delete
 9. தனபாலன் ரங்கஸ்வாமிNovember 6, 2012 at 10:04 PM

  இதை தான் நானும் உணர்ந்தேன் தோழா. நம் போன்ற தமிழின் மீது பற்று இருப்பவர்கள், இந்நிலை காணும்போது மனம் வெதும்பத்தான் செய்கிறது. தங்கள் உணர்விற்கும், பகிர்விற்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி தோழரே !!

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...