Monday, October 21, 2013

ஒளி காட்டும் வழி

வாசலை அலங்கரிக்கும் கோலங்களில்லை
தெருக்களில் ததும்பும் உற்சாகமில்லை
குதுகலித்து ஓடியாடும் சிறுவர் கூட்டமில்லை
அன்பை இனிப்புடன் பரிமார சொந்தங்களில்லை
வான் ஒளிரும் வான வேடிக்கைகளில்லை
செவி அதிரும் பட்டாசு சத்தமில்லை
திருநாளுக்கான எந்த அறிகுறியுமில்லா
அமைதியான தீபாவளி இன்று
கடல் கடந்து அமெரிக்காவில் !!
ஒளி விளக்கு மட்டுமே பிரகாசித்து
எண்ணெயும், திரியுமாய் இருந்தால்
இருள் அகன்று ஒளி பிறப்பது போல
இன்னல் அகன்று வாழ்வு பிரகாசிக்குமென
வாழ்த்தி வழி காட்ட
என்னவளுடன் என் முதல் தீபாவளி
நம்பிக்கை ஊட்டும் ஒளி காட்டும் வழி !!
நானிலத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஒளி காட்டும் நல்வழி  !!

இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது.

16 comments:

  1. அருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    நடுவர்களுக்கு கவிதையை (இணைப்பை) அனுப்பி வைக்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. //என்னவளுடன் என் முதல் தீபாவளி// வாழ்த்துகள் பல ஸ்ரீனி!

    //நம்பிக்கை ஊட்டும் ஒளி காட்டும் வழி
    நானிலத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டும்
    ஒளி காட்டும் நல்வழி !!// உங்கள் நம்பிக்கையும் மெய்ப்படட்டும், ஒளிமயமாய் உங்கள் வாழ்வு சிறக்கட்டும்! அருமை! வெற்றிபெற வாழ்த்துகள் ஸ்ரீனி!

    ReplyDelete
  3. ரா லோகநாதன்October 22, 2013 at 12:19 AM

    இந்த தீபாவளி திருநாளிலிருந்து நம் மனத்திலும், வாழ்விலும் தீப ஒளி பரவட்டும்!

    வாழ்த்துக்கள்

    வாழ்க! வளர்க!

    ReplyDelete
  4. வணக்கம்

    தங்களின் மின்னஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்….
    --------------------------------------------------------------------------------------------------

    கவிதை அருமையாக உள்ளது போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்…
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    -----------------------------------------25/10/2013------------------------------------------

    ReplyDelete
  5. முதலில் தலை தீபாவளி வாழ்த்துகள்!
    தனியாக இருந்தாலும் உங்கள் மனைவியுடன் கொண்டாடுவதில் ஒரு உற்சாகம் இருக்கும்தானே! அதை கவிதையில் கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. ஆமாம்.. நீங்கள் சொல்வது போல செய்திருந்தால் கவி இன்னும் சுவையாக இருந்து இருக்கும் :)

    தங்கள் வாழ்த்துக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ரஞ்சனி அவர்களே :).

    ReplyDelete
  7. வாழ்த்துகள் நண்பரே!!

    ReplyDelete
  8. தலை தீபாவளி வாழ்த்துக்கள், கவிஞரே! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  9. இழந்த அனைத்தையும் உம் மனைவி பக்கத்தில் இருக்கும் போது ஈடு செய்துவிடுமே. போகப் போக வெளி நாட்டு வாழ்வு பழகி போய் விடும்.
    முதல் தீபாவளியா வாழ்த்துக்கள்....!.

    எல்லா நலன்களும் பெற்று வாழ்வீராக....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இனியா அவர்களே :)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...