வாசலை அலங்கரிக்கும் கோலங்களில்லை
தெருக்களில் ததும்பும் உற்சாகமில்லை
குதுகலித்து ஓடியாடும் சிறுவர் கூட்டமில்லை
அன்பை இனிப்புடன் பரிமார சொந்தங்களில்லை
வான் ஒளிரும் வான வேடிக்கைகளில்லை
செவி அதிரும் பட்டாசு சத்தமில்லை
திருநாளுக்கான எந்த அறிகுறியுமில்லா
அமைதியான தீபாவளி இன்று
கடல் கடந்து அமெரிக்காவில் !!
ஒளி விளக்கு மட்டுமே பிரகாசித்து
எண்ணெயும், திரியுமாய் இருந்தால்
இருள் அகன்று ஒளி பிறப்பது போல
இன்னல் அகன்று வாழ்வு பிரகாசிக்குமென
வாழ்த்தி வழி காட்ட
என்னவளுடன் என் முதல் தீபாவளி
நம்பிக்கை ஊட்டும் ஒளி காட்டும் வழி !!
நானிலத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஒளி காட்டும் நல்வழி !!
இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது.
தெருக்களில் ததும்பும் உற்சாகமில்லை
குதுகலித்து ஓடியாடும் சிறுவர் கூட்டமில்லை
அன்பை இனிப்புடன் பரிமார சொந்தங்களில்லை
வான் ஒளிரும் வான வேடிக்கைகளில்லை
செவி அதிரும் பட்டாசு சத்தமில்லை
திருநாளுக்கான எந்த அறிகுறியுமில்லா
அமைதியான தீபாவளி இன்று
கடல் கடந்து அமெரிக்காவில் !!
ஒளி விளக்கு மட்டுமே பிரகாசித்து
எண்ணெயும், திரியுமாய் இருந்தால்
இருள் அகன்று ஒளி பிறப்பது போல
இன்னல் அகன்று வாழ்வு பிரகாசிக்குமென
வாழ்த்தி வழி காட்ட
என்னவளுடன் என் முதல் தீபாவளி
நம்பிக்கை ஊட்டும் ஒளி காட்டும் வழி !!
நானிலத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஒளி காட்டும் நல்வழி !!
இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது.