Tuesday, July 2, 2013

மூடர்கள், பகுத்தறிவாளிகள்

தெய்வங்களைச் சிலையாக உருவகப்படுத்தி
வணங்குபவர்கள்  மூடர்கள்,
தங்கள் தலைவரைச் சிலையாக உருவகப்படுத்தி
வணங்குபவர்கள் பகுத்தறிவாளிகள் !!.

கீதைப் படி அன்பு வழி நடக்க
முற்படுபவர்கள் மூடர்கள்
தங்கள் தலைவரின் சொற்படி கோவிலையும் இடிக்க
முற்படுபவர்கள் பகுத்தறிவாளிகள் !!

மந்திரங்கள்  ஓத கடவுள் சாட்சியாக திருமணம் 
செய்பவர்கள்  மூடர்கள்,
சம்பிரதாய பேச்சுடன் தங்கள் தலைவர் சாட்சியாக திருமணம் செய்பவர்கள் பகுத்தறிவாளிகள் !!

கடவுளின் பெயரால் நற்செயல்
செய்தாலும் மூடர்கள்,
தலைவரின் பெயரால் நற்செயல்
செய்தால் மட்டுமே  பகுத்தறிவாளிகள் !!

செயல் ஒன்று அர்த்தம் மட்டும் ஏனோ இரண்டு

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மூடர்கள்,
'தலைவன்' நம்பிக்கை கொண்டவர்கள் பகுத்தறிவாளிகள்,
என்ற இந்த பார்வை கொண்டவர்கள் என்று மாறுவார்கள் ?? 

13 comments:

  1. சரியான... மிகச்சரியான சிந்தனைகள் (கேள்விகள்...)

    அவரவர் மனதை பொறுத்து... ஒன்றும் செய்ய முடியாதென்பதும் உண்மை...

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆம். உண்மை !!. நன்றி நண்பரே. தங்கள் தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி :)

    ReplyDelete
  3. திராவிட பெரியாரியவாதிகளை பகுத்தறிவுவாதிகள் என்று விட்டீர்கள். பகுத்தறிவு பெரியாரைத் தாண்டியது சகோ. அத்துடன் காணா கடவுளை நம்புவது சரியெனின் காணும் தலைவனை வழி தொடர்வதும் சரிதானே. எனக்கு என்னவோ பழைய தலைவன் வழிபாடுகள் தான் கடவுள், மதங்களாக பரிணமித்திருக்கும் எனத் தோன்றுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. நான் கூறவில்லை நண்பரே. அவர்களே கூறி கொள்கிறார்கள் என்று தான் சாடுகிறேன். நீங்கள் கூறியது போல பகுத்தறிவு என்பது மத நம்பிக்கையை சார்ந்தது இல்லை.

      //அத்துடன் காணா கடவுளை நம்புவது சரியெனின் காணும் தலைவனை வழி தொடர்வதும் சரிதானே//

      நல்ல தலைவர்களை வழி தொடர்வது தவறு என்று நான் கூறவில்லையே. கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டவர்களை மூடர்களாக பார்க்காதீர்கள் என்று தான் கூறுகிறேன்.

      தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோ :)

      Delete
  4. கல்லைக் கும்பிடுவதே முட்டாள்தனம், இதில் கடவுள் என்ன, தலைவன் என்ன!!
    "கீதையில்" அன்பு இருக்கிறதா என்ன?
    "மந்திரங்கள் ஓத" - திருமணத்தில் ஓதப் படும் மந்திரங்களுக்கு அர்த்தம் தெரிந்துதான் ஏற்றுக் கொள்கிறீர்களா?
    நல்ல செயலைச் செய்ய கடவுள்/தலைவன் பெயர்கள் எதற்கு? நல்லவனாய் இருந்தால் போதாதா?!

    எனக்குத் தோன்றியதை பின்னூட்டமிட்டிருக்கிறேன். உங்களை வம்பிழுக்கும் நோக்கம் துளியும் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இரா.லோகநாதன்July 3, 2013 at 9:21 AM

      //நல்ல செயலைச் செய்ய கடவுள்/தலைவன் பெயர்கள் //எதற்கு? நல்லவனாய் இருந்தால் போதாதா?

      SUPERB! no comments!

      Delete
    2. மன்னிக்கவும் நண்பரே. தங்கள் கருத்தில் முழுவதுமாக எனக்கு உடன்பாடில்லை.

      //கல்லைக் கும்பிடுவதே முட்டாள்தனம், இதில் கடவுள் என்ன, தலைவன் என்ன!!//
      தங்களால் தேசிய கொடியையோ, தங்கள் நெருங்கியவர்களின் புகைபடத்தையோ வெறும் காதிதம் என்று மிதிக்க இயலுமா. எல்லாம் நம்பிக்கை தான் சகோ. நம்பிக்கை வைத்தால் காகிதமும் அம்மா தான், கல்லும் கடவுள். நம்பிக்கை அனைத்தும் முட்டாள்தனம் அல்ல. நீங்களும் முயற்சித்து பாருங்களேன் உங்களுக்கும் புரியும் :)

      //கீதையில்" அன்பு இருக்கிறதா என்ன?// இல்லை என்கிறீர்களா?

      //"மந்திரங்கள் ஓத" - திருமணத்தில் ஓதப் படும் மந்திரங்களுக்கு அர்த்தம் தெரிந்துதான் ஏற்றுக் கொள்கிறீர்களா?//

      மந்திரங்கள் அனைத்தும் பலருக்கும் புரியவில்லை என்பது உண்மை தான். ஆனால் என் வாதம் அது இல்லையே. இரண்டு திருமணகளிலும் பல வித சடங்குகள் (மாலை மாற்றுவதில் இருந்து, மந்திரம் ஓதுவது, வாழ்த்துச் செய்தி கூறுவது வரை), நம்பிக்கையுடன் நடத்தப்படுகின்றன. ஆனால் ஒரு பிரிவினரை மட்டும் 'அந்த நம்பிக்கைக்காக' ஏளனம் செய்தால் நியாமா?

      //நல்ல செயலைச் செய்ய கடவுள்/தலைவன் பெயர்கள் எதற்கு? நல்லவனாய் இருந்தால் போதாதா?!//
      உண்மை. அதைத் தான் நானும் சொல்கிறேன். யார் பெயரில் செய்தாலும் நல்லது நல்லது தானே.


      தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோ :)

      Delete
  5. இரா.லோகநாதன்July 3, 2013 at 4:58 AM

    மிகச்சரியான ஒப்பீடு!

    ReplyDelete
  6. எல்லாம் சரியானக் கேள்விகள் தான்..என்ன பண்றது, ஒவ்வொரு காசுக்கும் இரண்டு முகங்கள் :)
    வாழ்த்துகள் ஸ்ரீனி

    ReplyDelete
    Replies
    1. உண்மை :). மிக்க நன்றி கிரேஸ் :)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...