என் விழித்திரையில் விழும் காட்சிகள்,
என் நரம்பு மண்டலம் உணரும் உணர்ச்சிகள்,
என் செவி மடல் கேட்கும் ஒலிகள்,
இவை மட்டும் தான் நிஜமோ?
மற்ற அனைத்தும், அனைவரும் மாயையோ?
என் குடும்பத்தாரும், நண்பர்களும் கூட மாயையோ?
இல்லையெனில், ஏனையோரின் உணர்ச்சியை
ஏன் என்னால் உணர முடியவில்லை?
அவர்களின் உலகத்தை ஏன் என்னால் காண முடியவில்லை?
மாயையெனில், நான் மட்டும் இந்த உலகத்தில் தனியோ?
உலகத்தில் அனைத்தும் எனக்காகப் படைக்கப்பட்டதோ?
உலகத்திற்கு என்னைத் தனியாக அனுப்பிய
கடவுளின் நோக்கம் தான் என்னவோ?
இல்லை இந்த கேள்விகள் எல்லாம் நான் பித்துப்பிடித்தவனாக
மாறிக் கொண்டு இருக்கிறேன் என்பதற்கான அறிகுறியோ?
இந்த கேள்விகளுக்கு பதில் தருவோர்
யாருமுண்டோ இந்த உலகத்தில்.... மாய உலகத்தில் !!
உன் கேள்விகளுக்கு பாதிலளிப்பவர்களும், இந்த பதிவிற்க்கு பின்னூட்டம் எழுதுபவர்களும் மாயையோ? ;)
ReplyDeleteநான் கேட்ட கேள்வியே திருப்பி கேக்குறீயே?
Deleteyour question was,
Deleteஇந்த கேள்விகளுக்கு பதில் தருவோர்
யாருமுண்டோ இந்த உலகத்தில்.... மாய உலகத்தில் !!
//மற்ற அனைத்தும், அனைவரும் மாயையோ?//
Deleteஇந்த கேள்வியை வேற மாதிரி கேட்ட மாதிரி தோன்றியது :-)
சிந்த்தித்தால் சரியான விடை தெரியும்
ReplyDeleteகிடைக்கவில்லையே !!. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவயாழி கண்ணாதாசன் அவர்களே..
Deleteஇதை நானே பல முறை யோசித்து இருக்கிறேன்..உன்மையில் இது மாய உலகம் தான்..ஒவ்வொருவருக்கும்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே :)
Deleteமற்றவர்கள் உங்கள் மேல் காட்டும் அன்பு, அக்கறையால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தால்/அடைந்திருந்தால்... நீங்கள் உணர்ந்த இந்த உணர்ச்சி மாயை இல்லையென்றால் மற்றவர்கள் மாயை இல்லைதானே?
ReplyDeleteசிந்திக்க வச்சுட்டீங்களே கிரேஸ் :-)..என் மேல் அன்பு காட்ட நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை, எனவே இந்த உணர்ச்சி தான் மாயையோ ?
Deletenalladhu :)
Deleteதங்களின் பதிவை படிக்கும்போது கீழ்கண்ட பாடல் வரிகள்தான் நினைவிற்க்கு வருகிறது...
ReplyDeleteபோனதெல்லாம் கனவினைப்போல் உதைதழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
நன்றி நண்பரே.. பாரதியார் அவர்களின் பாடலை நினைவு படுத்திவிட்டேனா .. மகிழ்ச்சி மகிழ்ச்சி :)
Delete