போகி பண்டிகை காலை 10 மணி. அன்று பள்ளி விடுமுறை என்பதால் மணி 10 ஆகியும் படுக்கையில் பிறண்டு கொண்டு இருந்தான் சீனி. சீனி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். "சீனி, மணி 10 ஆகுது இன்னும் என்னடா தூக்கம்? இன்னைக்கு வீடு clean பண்ணனும் வந்து help பண்ணுடா" என்று அவன் அக்கா லக்ஷ்மி அவனை எழுப்பினாள். "விடு லக்ஷ்மி அவன் தூங்கட்டும்" என்று சீனிக்கு ஆதரவாக அவன் அம்மா சரஸ்வதி களம் இறங்க, "அம்மா, நான் மட்டும் காலைல இருந்து help பண்ணறேன் இவன் மட்டும் நல்லா தூங்குறான்" என்று அவளது அம்மாவை திருப்பிக் கேட்டாள் லக்ஷ்மி. "அவன் எந்திரிச்சா மட்டும் என்ன பண்ண போறான், சும்மா அங்கையும் இங்கையும் சுத்திக்கிட்டு disturb பண்ணிக்கிட்டு தான் இருப்பான், அவன் தூங்குறதே நல்லது" என்ற அம்மா கூற, "கரெக்ட்'ல" என்று நினைத்து கொண்ட தன் 'cleaning' வேலைக்கு திரும்பினாள் லக்ஷ்மி. இது நடந்த சற்று நேரத்தில் நித்திராதேவி சீனியை விட்டு விலக, அவனுக்கு அன்றைய நாள் தொடங்கியது. அன்றைய நாள் முழுவதும் வீட்டில் நடக்கும் "கிளீனிங்" வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டும், உதவி என்ற பெயரில் தொந்தரவு செய்து கொண்டும் நாளை கடத்தினான். இரவானதும் அம்மா, அக்கா இருவரும் கோலம் போட்டு கொண்டு இருக்க சீனி வழக்கம் போல் அவர்களுக்கு 'உதவி' செய்து கொண்டு இருந்தான். அப்போது அவன் அப்பா கிருஷ்ணன் "சீனி, நீ போய் தூங்கு, நாளைக்கு காலைல பொங்கல், இன்னைக்கு மாதிரி 11 மணி வரை தூங்க கூடாது, சீக்கிரம் பொங்கல் வச்சுட்டு ஊருக்கு போகணும்". ஊருக்கு போகணும் என்று அப்பா சொன்னவுடன் சீனிக்கு சந்தோசம். சீனி அம்மா, அப்பாவின் சொந்த ஊர் குஜிலியம்பாறை. திண்டுக்கல் அருகில் ஒரு கிராமம். பொங்கலுக்கு அவர்கள் குடும்பத்துடன் அங்கு செல்வது வழக்கம். சீனிக்கு அங்கு செல்வது சந்தோஷமான ஒன்று. அங்கு அவனது சித்தப்பா மகன் மற்றும் மாமன் மகன்களுடன் விளையாண்டும், கோழிகளை விரட்டி கொண்டும், மாட்டு பொங்கல் அன்று பள்ளி ஆசிரியராக இருக்கும் அவனது சித்தப்பா நடத்தும் விளையாட்டு போட்டிகளை கண்டு கழித்தும் கூதுகலமாக சுற்றி திரிவான். அந்த சிந்தனையுடனே சீனி தூக்கத்தில் ஆழ்ந்தான்.பொங்கல் நாள் காலை 5 மணிக்கு "சீனி, எந்திரி time ஆச்சு, சாமி கும்பிட்டு ஊருக்கு கிளம்பனும், நாங்க எல்லாம் பாரு ready ஆயிட்டோம்" என்று சீனியை எழுப்பினார் அவனுடைய அப்பா. ஊருக்கு போறோம் என்ற சந்தோஷத்தில் மட மட என கிளம்பினான் சீனி. மொட்டை மாடியில் சூரியன் உதிக்கும் தருவாயில், மண் சட்டியில் சீனியின் அம்மா பொங்கல் வைக்க, அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கூவினர். பின்னர் 8 மணிக்கெல்லாம் குஜிலியம்பாறைக்கு பயணப்பட்டனர் சீனியும் அவனது குடும்பமும். கோயம்புத்தூர்இல் இருந்து குஜிலியம்பாறை போய் சேர 5 மணி நேரம் ஆகியது. போய் சேர்ந்த உடன் நடந்து கொண்டு இருந்த சேவல் சண்டையை பார்க்க ஓடினான். அப்போது அவனது அப்பா, "சீனி, வந்தவுடன் போகாட்டி என்ன? கொஞ்சம் நேரம் கழிச்சு போ" என்று கூறியும் அப்பாவின் சொல்லை கேளாமல் ஓடினான். சேவல்கள் மோதி கொள்ளும் காட்சியையும், அவை சண்டைக்கு தயார் செய்யப்படும் விதத்தையும் பிரம்மிப்பாக பார்த்து கொண்டு இருந்தான். அதன் பின்னர் தோட்டத்திற்கு சென்று கேணியிலும், வயல்காலிலும் விளையாடலனான். அதன் பின் இருட்ட ஆரம்பித்தால், வீட்டுக்கு திரும்பினான்.அடுத்த நாள் மாட்டு பொங்கல் தினம், சீனியின் சித்தப்பா பொறுப்பேற்று நடத்தும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம் ஆகின. சீனி எந்த போட்டியிலும் பங்கேற்க்கவில்லை என்றாலும் அனைத்து போட்டிகளை ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தான். கபடி, 'Slow சைக்கிள்', கல் எறிதல், கண்ணை கட்டி சட்டி உடைத்தல், பாட்டு போட்டி, வினாடி வினா என போட்டிகள் அன்று முழுவதும் நடந்து கொண்டு இருந்தது. அனைத்தையும் ஆர்வமாக பார்த்தான் குறிப்பாக கபடி போட்டியினை மிகவும் ரசித்தான். போட்டிகள் முடிந்து பரிசுகள் கொடுத்தவுடன் அன்றைய தினம் முடிவுக்கு வந்தது.
அடுத்த நாள் காலை 8 மணி, சீனியின் அப்பா - "சீனி, 10 மணிக்கு நாம் கோயம்புத்தூர் கிளம்புறோம்" என்றார். "அப்பா, நாளைக்கு போலாம் அப்பா" என்றான் சீனி. "இல்லை சீனி, உனக்கு school இருக்கு இன்னைக்கு போனா தான் correcta இருக்கும்" என்று அவர் கூற வேறு வழி இல்லாமல் அதை ஏற்று கொண்டான். அன்று காணும் பொங்கல் என்பதால் பேருந்தில் கூட்டம் அலை மோதியது. இதை பார்த்து அப்பா முடிவு மாறாதா? என்று சீனி நினைத்து கொண்டு இருந்தான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்காததால் பேருந்தில் ஏறி கோயம்புத்தூர்க்கு ஆன அவனது பயணம் தொடங்கியது.
"பாம் !! பாம் !!" என்ற 'horn' சத்தம் .
"டேய், என்னடா யோசிச்சுக்கிட்டு இருக்க?, signal போட்டு 5 mins ஆச்சு. Horn அடிக்கிறாங்க, காரை எடு, conferenceக்கு வேற time ஆச்சு" என்று சீனி பக்கத்தில் இருக்கும் அவன் நண்பன் கூற, நினைவு உலக பேருந்து பயணத்தில் இருந்து நிஜ உலக கார் பயணத்துக்கு வந்தான் சீனி, "CovaiVeeran Aviations" என்ற கம்பெனி'இன் CEO. அவனுக்கு வயது 34. "இன்னைக்கு பொங்கல், சின்ன வயசுல எவ்வளவு நல்லா 'celebrate' பண்ணினோம், இப்ப எல்லாம் ஒரு festive spiritae இல்லை. பொங்கல் is just another day" என்று நினைத்து கொண்டே தனது 'BMW' காரினை அழுத்தினான். அந்த கார் சிட்டாக பறந்து 'Concrete jungle'இல் மறைந்தது.
(பின்குறிப்பு - இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே :-))