அன்பு நிறைந்த மொழி,
ஆண்டவன் அருளிய மொழி,
இலக்கணமில்லா மொழி,
ஈடு இணை இல்லா மொழி,
உவகை தரும் மொழி,
ஊரார் அனைவரையும் மயக்கும் மொழி,
எளிதில் மேதைகளுக்கும் புரியா மொழி,
ஏக்கம் தீர்க்கும் மொழி,
ஐயமேதும் எழா மொழி,
ஒளிவு மறைவற்ற மொழி,
ஓங்கார இசையினும் இனிய மொழி,
ஔவை ரசித்த மொழி,
அஃதே.. மழலை மொழி !!..
ஆண்டவன் அருளிய மொழி,
இலக்கணமில்லா மொழி,
ஈடு இணை இல்லா மொழி,
உவகை தரும் மொழி,
ஊரார் அனைவரையும் மயக்கும் மொழி,
எளிதில் மேதைகளுக்கும் புரியா மொழி,
ஏக்கம் தீர்க்கும் மொழி,
ஐயமேதும் எழா மொழி,
ஒளிவு மறைவற்ற மொழி,
ஓங்கார இசையினும் இனிய மொழி,
ஔவை ரசித்த மொழி,
அஃதே.. மழலை மொழி !!..
மழலை மொழியின் அருமையை அருமையாய் கவியாக்கிருக்கீங்க ஸ்ரீனி! அருமை!
ReplyDeleteமிக்க நன்றி கிரேஸ் :)
DeleteSenthil Raja has left a new comment on your post "உயிர் மொழி":
ReplyDeleteHi,
Nice one. I am a tutor for 3rd class kids from Kanyakumari. I will share this to my students with your permission.
Can you try the same with க, ங, ச ?
நன்றி நண்பரே.. தாங்கள் தாரளமாக பகிர்ந்து கொள்ளலாம். க, ங, ச வைத்து கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். :).
(தங்கள் பின்னூட்டத்தை தற்செயலாக அழித்துவிட்டேன் :(. எனவே முழுவதையும் இங்கே பதிவு செய்கிறேன்)
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி நண்பரே. ஆம்!!. வலைச்சரம் கண்டேன் உவகை கொண்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. என் தளத்தை தொடர்ந்தமைக்கும் நன்றி :)
Deleteஅருமை ! மிகவும் அருமையாக அ வில் தொடங்கி ஃ வில்
ReplyDeleteமுடியும் வரை கருத்துப் பிசகாமல் அழகாக சொல்ல
வந்த விசயத்தைச் சொல்லி முடித்த விதம் அருமை !
உங்களுக்கு எனது பாராட்டுக்கள் சகோதரா ......
மிக்க நன்றி சகோதரி :). தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.:)
Delete