Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Monday, November 6, 2017

எங்கள் நந்தனே !!

உலகாண்ட  ராஜ ராஜன்
உதித்த ஐப்பசியில்
எங்களை ஆள உதித்த
எங்கள் கோவே !!

மழலையின் கொஞ்சலோடும்
மதுரத் தமிழின் இனிமையோடும்
எங்களை வசீகரிக்கும்
எங்கள் அமுதே !!

முருகனின் அழகோடும்
முகுந்தனின் குறும்போடும்
எங்களை ஆட்கொண்ட
எங்கள் நந்தனே !!

கீதை துணைக்  கொண்டு
காமராஜர் வழிச்  சென்று
உலகை செழிக்க வைக்க
உளமார வாழ்த்துகிறோம் !!




Saturday, January 7, 2017

நந்தனின் முதல் பிறந்தநாள்


என் அன்பு மகன் நந்தனின் முதல் பிறந்தநாள் 
அழைப்பிதழுக்காக எழுதிய சிறு கவிதை

குறும்பு கண்டு குதூகலித்த வருடம் 
புன்சிரிப்பு கண்டு பூரித்த வருடம்
மழலை கேட்டு மகிழ்ந்த வருடம்
பட்டுக்கன்னம் தொட்டு பரவசித்த வருடம்
கண்ணனும் கந்தனும் அருளிய
எங்கள் குட்டி நந்தனின் முதல் வருடம்
உங்கள் ஆசீர்வாதம் பெற்று
முழுமை பெற அன்புடன் அழைக்கிறோம்



Thursday, September 1, 2011

முதல் பிறந்த நாள்


என் அக்காவின் பெண் குழந்தைக்கு நான் எழுதிய கவிதை (அ) வாழ்த்து மடல்

பிறந்த நாள் !! முதல் பிறந்த நாள் !!
என்னிடமிருந்து கடைக்குட்டி என்ற பட்டத்தை பறித்த
எங்கள் கடைகுட்டிக்கு முதல் பிறந்த நாள்
அக்காவிடமிருந்து வீட்டின் ராணி என்ற பட்டத்தை பறித்த
எங்கள் வீட்டின் ராணிக்கு முதல் பிறந்த நாள்
அக்காவின் குணமான தைரியம், தன்னம்பிக்கை கொண்ட
எங்கள் கிரண் பேடிக்கு முதல் பிறந்த நாள்
அறிவில் சிறந்து விளங்க போகும்
எங்கள் மேரி கியூரிக்கு முதல் பிறந்த நாள்
அறத்தில் சிறந்து விளங்க போகும்
எங்கள் தெரேசாவிற்கு முதல் பிறந்த நாள்
இந்த பிறந்த நாள் போல் பல நூறு பிறந்த நாள் காண போகும்
எங்கள் பொக்கிஷத்திற்கு முதல் பிறந்த நாள்
ஆம் !! முதல் பிறந்த நாள்
இது லேக்காவின் முதல் பிறந்த நாள்
Related Posts Plugin for WordPress, Blogger...