தரவரிசை(ரேங்க்) நோக்கி ஓட்டம்,
பருவ வயதில் சுயவிருப்பத்தை மறந்து
'காகித' பட்டம் நோக்கி ஓட்டம்,
பட்டம் பெற்றவுடன் படித்த படிப்பை மறந்து
'கணினி' வேலை நோக்கி ஓட்டம்,
பின் குடும்பத்தைப் பிரிந்து
பதவி உயர்வு நோக்கி ஓட்டம்,
இன்று தாய்நாட்டை துறந்து
பணத்தை நோக்கி ஓட்டம்,
எதற்காக இந்த தொடர் ஓட்டம்?
யாருக்காக இந்த ஓட்டம்?
எதை நோக்கி இந்த இலக்கிலா ஓட்டம்?
எங்கே நிற்கும் இந்த ஓட்டம்?
உடல்நலம் மற்றும் குடும்பநலம் பேணாது பொருளை தேடி ஓடும் மானிடா, பின்பு அந்த பொருளைக்கொண்டு உடல்நலம் மற்றும் குடும்பநலம் பேண விளைவதேனடா?
ReplyDeleteமுன் செய்த தவறுக்கு பரிகாரம் தேடுகிறோமோ?
Deleteஉங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது நண்பரே "பணத்தை நோக்கி ஓட்டம்" இதை குறி வைத்து தானே எல்லா பெற்றோர்களும் குழந்தைகளின் சுதந்திரத்தை பறித்து அவர்களை இயந்திர வாழ்க்கைக்கு வித்திடுகிறார்கள், குழந்தைகள் மாலை நேரங்களில் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதை காண முடிகிறதா ? படித்து வேலை தேடி வருமானம் ஈட்டிய பின்பு அவனால் தன் சந்ததியையும் அப்படியே வளர்க்கவே கட்டாய படுத்துகிறான் வாடிய மலர்களாகவே கடந்து செல்கிறது குழந்தைபருவம்.
ReplyDeleteஉண்மை நண்பரே.. அழகாக சொன்னீர்கள். :-). தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
Deleteதேவை இல்லாத ஓட்டம்... எவ்வளவு தூரம் ஓடுகிறோம் என்பது நம் கையில்/கால்களில் :-)
ReplyDeleteஇதை ஒட்டிய என் பதிவு..http://thaenmaduratamil.blogspot.com/2013/01/blog-post_23.html#comment-form
நீங்கள் கூறுவது உண்மை தான் கிரேஸ். ஓட்டத்தை நிறுத்த தேவையான தைரியத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் கடவுள் எனக்கு அருள வேண்டும்.
Deleteநாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருகிறது, பணம் எல்லாவற்றுக்கும் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. போதும் என்ற மனம் வரும் வரை நாம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். போதும் என்ற மனம் எப்போது வறும்? உன் உள் மனம் என்ன சொல்லுகிறது என்று கேட்டுப்பார், உனக்கு விடை கிடைக்கும்.
ReplyDeleteநன்றி சாமி உங்க கருத்தை பதிவு செய்ததிற்கு :). உள்மனம் சொல்வதை புத்தி கேட்க வேண்டுமே, உள் மனதை சொல்வது போல நடப்பதற்கு தைரியமும் வேண்டுமே..
Delete